அழுகிய நிலையில் கணவர் உடல்; யாரையும் நெருங்க விடாத மனைவி

Added : மே 24, 2022 | |
Advertisement
சென்னை : சென்னை, புரசைவாக்கம், வைக்கோல்காரன் தெருவைச் சேர்ந்தவர் அசோக் பாபு, 53. இவர், வேலுார் மாவட்டம், ஆம்பூரில் தோல் பொருள் மற்றும் கட்டுமான வேலை செய்து வந்தார்.இவரது மனைவி பத்மினி, 48. இவர்களது மகள் ஆர்த்தி, 27. திருமணமாகி கணவருடன் சென்னை, நுாம்பல் பகுதியில் வசிக்கிறார். மகன் அனுஷ் அரவிந்த், 24. பெங்களூருவில் கட்டட வடிவமைப்பாளராக பணிபுரிகிறார். அசோக் பாபுவும், அவரது
அழுகிய நிலையில் கணவர் உடல்; யாரையும் நெருங்க விடாத மனைவி

சென்னை : சென்னை, புரசைவாக்கம், வைக்கோல்காரன் தெருவைச் சேர்ந்தவர் அசோக் பாபு, 53. இவர், வேலுார் மாவட்டம், ஆம்பூரில் தோல் பொருள் மற்றும் கட்டுமான வேலை செய்து வந்தார்.

இவரது மனைவி பத்மினி, 48. இவர்களது மகள் ஆர்த்தி, 27. திருமணமாகி கணவருடன் சென்னை, நுாம்பல் பகுதியில் வசிக்கிறார். மகன் அனுஷ் அரவிந்த், 24. பெங்களூருவில் கட்டட வடிவமைப்பாளராக பணிபுரிகிறார். அசோக் பாபுவும், அவரது மனைவியும் புரசைவாக்கத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்தனர்.பத்மினிக்கு, 2011ல் மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது. 2018க்கு பின் தீவிரமாகிவிட்டது. மகள் ஆர்த்தி, தந்தையுடன் தினமும் மொபைல் போனில் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

கடந்த 21ம் தேதி மாலையில், தந்தையுடன் பேசியுள்ளார். அதன் பின், தொடர்பு கொண்ட போது எதிர்முனையில் பேசவில்லை.இந்த நிலையில், 23ம் தேதி, மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்'பில் இருந்தது. இதனால், சந்தேகமடைந்த ஆர்த்தி அன்றைய தினம் மதியம், தந்தை வீட்டிற்கு சென்று பார்த்தார். உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்தது.இது குறித்து, வேப்பேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கதவை உடைத்து பார்த்தனர். அப்போது, அசோக் பாபு உடலில் துணிகள் இன்றி, இறந்த நிலையில் கிடந்தார். அருகில் பத்மினி அமர்ந்த நிலையில், கணவரையே பார்த்தபடி இருந்தார். கணவர் அருகில் போலீசார் செல்லாதபடி தடுத்தார்.

போலீசார் அவரை மீட்டு, அரசு மன நல மருத்துவனையில் சேர்த்தனர். அசோக்பாபுவின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அனுப்பி வைக்கப்பட்டது.அவரது மார்பு, கைகள் மற்றும் கழுத்து பகுதியில் தோல் உரிந்து, முகம் வீங்கிய நிலையில் இருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே, இறப்புக்கான காரணம் தெரியவரும்.இதனால், மர்ம மரணம் என, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X