இருளில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை| Dinamalar

இருளில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை

Added : மே 24, 2022 | |
சென்னை புழல் கதிர்வேடு சந்திப்பு முதல், செங்குன்றம் புறவழிச்சாலை சந்திப்பு வரை, 3 கிலோ மீட்டர் துாரத்திற்கு, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, மின் விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளன.அதனால், போக்குவரத்து நிறைந்த, அந்த சாலை இருளில் மூழ்கி உள்ளது.இந்த நிலையில், புழல்- - அம்பத்துார் சாலை சந்திப்பு, கதிர்வேடு சந்திப்பு, மத்திய சிறைச்சாலை மற்றும் காவாங்கரை 'சிக்னல்'

சென்னை புழல் கதிர்வேடு சந்திப்பு முதல், செங்குன்றம் புறவழிச்சாலை சந்திப்பு வரை, 3 கிலோ மீட்டர் துாரத்திற்கு, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, மின் விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளன.

அதனால், போக்குவரத்து நிறைந்த, அந்த சாலை இருளில் மூழ்கி உள்ளது.இந்த நிலையில், புழல்- - அம்பத்துார் சாலை சந்திப்பு, கதிர்வேடு சந்திப்பு, மத்திய சிறைச்சாலை மற்றும் காவாங்கரை 'சிக்னல்' பகுதிகளில் சாலையை கடப்போர், இருட்டு காரணமாக, விபத்துகளில் சிக்கும் ஆபத்து உள்ளது.மாநகர பேருந்தில் பயணிக்கும் பலரும், மேற்கண்ட நிறுத்தங்களில் இறங்கி, சாலையை கடந்துதான், வீடுகளுக்கு செல்ல வேண்டும்.இந்த பிரச்னை குறித்து, போக்குவரத்து போலீசாரும், தேசியநெடுஞ்சாலை துறையினரும், ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்து, சாலை விபத்து, உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X