மழை நீர் சேகரிப்பு குளம் கழிவு நீர் பாய்ந்து 'பாழ்'

Added : மே 24, 2022 | |
Advertisement
மாதவரம் : மழை நீர் வடிகால் அடைப்பால் தேங்கிய கழிவு நீரை குளத்தில் பாய விட்டு, மாநகராட்சியினர் அட்டூழியம் செய்கின்றனர்.சென்னை மாதவரம் மண்டலம், 26வது வார்டு, மாதவரம் பால்பண்ணை ஆவின் பாலகம் அருகே, மாநகராட்சி குளம் உள்ளது.கடந்த 2019ம் ஆண்டு, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், மாநகராட்சி வடிகால் துறை வாயிலாக, 5 அடி ஆழத்திற்கு துார் வாரி, மழை நீர் சேகரிப்புக்காக, 8 அடி ஆழம் கொண்ட

மாதவரம் : மழை நீர் வடிகால் அடைப்பால் தேங்கிய கழிவு நீரை குளத்தில் பாய விட்டு, மாநகராட்சியினர் அட்டூழியம் செய்கின்றனர்.

சென்னை மாதவரம் மண்டலம், 26வது வார்டு, மாதவரம் பால்பண்ணை ஆவின் பாலகம் அருகே, மாநகராட்சி குளம் உள்ளது.கடந்த 2019ம் ஆண்டு, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், மாநகராட்சி வடிகால் துறை வாயிலாக, 5 அடி ஆழத்திற்கு துார் வாரி, மழை நீர் சேகரிப்புக்காக, 8 அடி ஆழம் கொண்ட குளமாக மேம்படுத்தப்பட்டது.

இளநீர் கூடுஅருகிலுள்ள அரசு தோட்டக்கலை பூங்காவை ஒட்டி மட்டுமே, மழை நீர் வரத்துக்கான குழாய் அமைக்கப்பட்டது. ஆனால், கடந்தாண்டு பலத்த மழை பெய்தாலும் கூட, இந்த குளத்திற்கு மழை நீர் வரத்துக்கான கால்வாய் வசதியின்றி, மழை நீர் தேங்கி குளம் நிறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த குளத்திற்குள், அருகிலுள்ள இறைச்சிக் கடைகளில் இருந்து இறைச்சிக் கழிவு மற்றும் இளநீர் கூடு உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் தினமும் வீசப்படுகின்றன.

இது தவிர, 'டெங்கு' கொசு புழுக்களை உருவாக்கும் சேதமடைந்த பழைய பிரிட்ஜ் ஆகியவற்றின் கழிவுகளும் குளத்தில் வீசப்படுகின்றன.இந்நிலையில், அரசு தோட்டக்கலை பூங்காவின் பின்பக்கம் உள்ள, மூல சத்திரம் செல்லும் பிரதான சாலையை ஒட்டி, கடந்தாண்டு, மாநகராட்சி வாயிலாக மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது.ஆனால், அந்த கால்வாயில், தோட்டக்கலை பூங்காவை சுற்றி உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் மொத்த கழிவு நீரும் பாய்கிறது.அதிலும், பேங்க் காலனி சந்திப்பில், முழுமையாக வடிகால் பணி முடியாததால், அங்கு வீசப்படும் குப்பை கழிவுகளால், அவ்வப்போது அடைப்பு ஏற்படுகிறது.இந்நிலையில், அடைப்பு காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக வெளியேறும் கழிவு நீர் சாலையில் பாய்ந்து தேங்கியது.புகார்அதனால், ஆவின் பாலகம், ஆவின் நிர்வாகம் அலுவலகம், சிறுவர் பூங்கா மற்றும் பால் உற்பத்தி பண்ணை ஆகியவற்றை சுற்றி, கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.இது குறித்து, பொதுமக்கள், மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தனர்.அதையடுத்து, மாதவரம் மண்டல ஊழியர்கள், ஆவின் பாலகம் அருகே, டீசல் மோட்டார் அமைத்து, குழாய் வாயிலாக கழிவு நீரை, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட மழை நீர் சேகரிப்பு குளத்தில் பாயவிட்டனர்.

இதனால், ஏற்கனவே சீர்கேடில் சிக்கிய குளத்தின் நிலை, மேலும் மோசமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.அரசு தோட்டக்கலை பூங்கா, ஆவின் பால் பண்ணை மற்றும் ஆவின் பாலகம் ஆகியவற்றின் அருகே, மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படும் இடத்தை ஒட்டி, அந்த குளம் உள்ளது.இதனால், அதை மழை நீர் சேகரிப்புக்கு எடுத்துக்காட்டாக பாதுகாக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X