'பூஸ்டர் டோஸ்' போட தயங்காதீர்!

Added : மே 24, 2022 | |
Advertisement
பெங்களூரு:கர்நாடகாவில் பூஸ்டர் டோஸ் போட்டு கொள்ள மக்கள் தயக்கம் காட்டுவது ஏன் என்பது குறித்து, மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, முன்னெச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் போடப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோர் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி, ஒன்பது மாதத்துக்கு பின், 'பூஸ்டர் டோஸ்' போட்டுக்

பெங்களூரு:கர்நாடகாவில் பூஸ்டர் டோஸ் போட்டு கொள்ள மக்கள் தயக்கம் காட்டுவது ஏன் என்பது குறித்து, மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, முன்னெச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் போடப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோர் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி, ஒன்பது மாதத்துக்கு பின், 'பூஸ்டர் டோஸ்' போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஏப்ரல் 10- முதல் இதுவரை 4.64 லட்சம் பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ்' போட்டு கொண்டுள்ளனர்.
பூஸ்டர் டோஸ் போடுவதால் பாதகமான விளைவு ஏற்படுமோ என்ற பயம் உட்பட சில சந்தேகம் மக்களிடம் நிலவுவதாக சொல்லப்படுகிறது.மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: நீண்ட காலமாக முழுமையான தடுப்பூசி என்பது இரண்டு டோஸ்தான் என மக்களுக்கு சொல்லப்பட்டது. தற்போது பூஸ்டர் டோசுக்கு பதிலாக, முன்னெச்சரிக்கை டோஸ் என்ற வார்த்தையை சேர்த்தது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா ஆபத்து கணிசமாக குறைந்து இருக்கும்போது, நோய்த் தடுப்பினால் ஏற்படும் பாதக நிகழ்வு ஆபத்தைப் பற்றி மக்கள் கவலைப்படுகின்றனர். குழந்தைகளுக்கு கல்லீரல் செயலிழப்பு, ரத்த உறைவு பிரச்னை, தடுப்பூசியால் இறப்பவர்கள் பற்றிய பிரசாரங்கள் போன்றவை டோஸ் எடுப்பதில் தயக்கம் ஏற்படுத்துகின்றன. ஒமைக்ரான் அலை மிக ஆபத்தான ஒன்றாக இல்லாததால், தடுப்பூசி சோர்வை அதிகரிக்கிறது.இதற்கு எதிராக பேச வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. முடிவு எடுக்க மக்களை விட வேண்டும்.
தடுப்பூசி திட்டங்கள் இல்லாத நாடுகள், மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை மக்களிடம் தெரியப்படுத்துவது முக்கியம்.ஒரு தொற்றுநோய் மருத்துவர் என்ற முறையில் தடுப்பூசியின் பொதுவான பக்கவிளைவு, உடல்நலக்குறைவு என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். ஆனால் கோடை காலம் தொடர்வதையும், பூஸ்டர் டோஸ் போடுவதால் மக்கள் சோர்வை அனுபவிப்பதையும் பார்க்கிறேன். இது நீடிக்கக்கூடாது.
தடுப்பூசி போட்ட ஆரம்ப நாட்களில் யாராவது சோர்வு, உடல் சோர்வு, உடல் வலி உணர்ந்தால் பக்க விளைவுதான். அது போய் விடும். பூஸ்டர் டோஸ் பயன் பற்றிய ஆலோசனை முக்கியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X