கடனை திருப்பித் தர முடியாத விரக்தி; தூக்கிட்டு வாலிபர் தற்கொலை

Added : மே 24, 2022 | |
Advertisement
ராஜமங்கலம் : கடன் பிரச்னையால் மனமுடைந்த வாலிபர், தன் நிலை குறித்த வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சென்னை கொளத்துார், மக்காராம் தோட்டம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவரது மகன் கந்தன், 28; திருமணமாகவில்லை. கொளத்துாரில் தந்தையுடன் மணல், ஜல்லி வியாபாரம் செய்தார். கந்தன், தொழில் முதலீட்டுக்காக, அதே பகுதியை சேர்ந்த
கடனை திருப்பித் தர முடியாத விரக்தி; தூக்கிட்டு வாலிபர் தற்கொலை

ராஜமங்கலம் : கடன் பிரச்னையால் மனமுடைந்த வாலிபர், தன் நிலை குறித்த வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை கொளத்துார், மக்காராம் தோட்டம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவரது மகன் கந்தன், 28; திருமணமாகவில்லை. கொளத்துாரில் தந்தையுடன் மணல், ஜல்லி வியாபாரம் செய்தார். கந்தன், தொழில் முதலீட்டுக்காக, அதே பகுதியை சேர்ந்த வடிவேலு என்பவரிடம், 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். அதில், 70 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுத்துள்ளார். கொரோனா பாதிப்பால், குறிப்பிட்ட காலத்திற்குள் 30 ஆயிரம் ரூபாயை கொடுக்க முடியவில்லை.

கடன் கொடுத்தவர் அடிக்கடி மொபைல் போனில் தொடர்பு கொண்டு, பணம் கேட்டுள்ளார். இதே போல் நேற்று முன்தினம் இரவு, 'பாக்கி பணத்தை உடனே தராவிட்டால், வீட்டிற்கு வந்து அசிங்கப்படுத்தி பணத்தை வசூலிப்பேன்' என மிரட்டியதாக கூறப்படுகிறது.கந்தன் இதைப் பற்றி, தந்தை ஜெயசங்கரிடம் கூறிவிட்டு, தன் அறையில் துாங்கச் சென்றுள்ளார்.கடன் பிரச்னையால் துாக்கமின்றி தவித்த இவர், தன் நிலை குறித்து, நள்ளிரவில் நண்பர்களுக்கு வீடியோ அனுப்பிவிட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை அந்த வீடியோவை பார்த்த நண்பர்கள், கந்தனின் வீட்டிற்குச் சென்று விசாரித்து,அவரது அறை கதவை திறந்த போது, தன் தாயின் புடவையால் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. உடனே, கொளத்துார் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது, அவர் இறந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

தகவலறிந்து வந்த ராஜமங்கலம் போலீசார், கந்தன் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதையடுத்து, காலை 10:00 மணியளவில், கந்தனின் உறவினர், நண்பர்கள், ராஜமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, வீடியோ ஆதாரத்தை காட்டி, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வலியுறுத்தினர். தகுந்த நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததால் அங்கிருந்து கலைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X