24 மணி நேரம் அவசர குழுஅமைச்சர் சுனில் குமார் உத்தரவு

Added : மே 24, 2022 | |
Advertisement
தட்சிண கன்னடா:பருவமழை துவங்கவுள்ளதால், அனைத்து தாலுகாக்களிலும், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அவசர குழு அமைக்க, மின் துறை அமைச்சர் சுனில் குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.முதல்வரின் உத்தரவின்படி, மாவட்ட நிர்வாகிகளுடன் அமைச்சர் சுனில் குமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர் கூறியதாவது:பருவமழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட
24 மணி நேரம் அவசர குழுஅமைச்சர் சுனில் குமார் உத்தரவு

தட்சிண கன்னடா:பருவமழை துவங்கவுள்ளதால், அனைத்து தாலுகாக்களிலும், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அவசர குழு அமைக்க, மின் துறை அமைச்சர் சுனில் குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முதல்வரின் உத்தரவின்படி, மாவட்ட நிர்வாகிகளுடன் அமைச்சர் சுனில் குமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர் கூறியதாவது:பருவமழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட நிர்வாகத்துடன், முதல்வர் பொம்மை ஏற்கனவே ஆலோசனை நடத்தினார். 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அவசர குழு எண் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருக்க வேண்டும்.
இழப்பீடு தொகையை உடனடியாக வழங்குதல்; சார்மாடி காட், ஷீராடி காட், சம்பாஜே காட் ஆகிய பகுதிகளை, மாவட்ட கலெக்டர், ஜில்லா பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.தேவைப்பட்டால், பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் ஹாசன் துணை கமிஷனரிடம் பேசி பிரச்னைகள் குறித்து நடவடிக்கை எடுத்தல்; விபத்தை தவிர்க்க, இந்திய தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடக்கும் இடங்களில் குறியீடு பதாகைகள் வைத்தல்; ரோடுகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை; குறியீடு பதாகைகள் சேதமடைந்திருந்தால், அவற்றை மீண்டும் நிறுவ வேண்டும்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் உதவியுடன் சாலைகளில் உள்ள பள்ளங்களை மூடும் பணியை விரைந்து மேற்கொள்ளல்; மெஸ்காம் மின் ஊழியர்கள் எப்போதும் தயாராக இருத்தல்;மின்மாற்றி இயங்கவில்லை என்றால், உடனடியாக சரி செய்தல்; மழை காலத்தில் டெங்கு, மலேரியா காய்ச்சல் வராமல் தடுக்க சுகாதார துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்; மங்களூருவில் டெங்கு, மலேரியா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X