மின்சார பிரச்னைக்கு11 எண்கள் அறிவிப்பு| Dinamalar

மின்சார பிரச்னைக்கு11 எண்கள் அறிவிப்பு

Added : மே 24, 2022 | |
பெங்களூரு:மின் தடை, மின்சாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க, 11 'வாட்ஸ் ஆப்' எண்களை, மின் துறை அறிவித்துள்ளது.கர்நாடகத்தில் மின்சாரம் தொடர்பான தகவல்களுக்கு '1912' என்ற எண் இயங்கி வருகிறது. ஆனால், அவசர நேரத்தில் இந்த எண் கிடைப்பதில்லை அல்லது தாமதமாகிறது.. இப் பிரச்னைக்கு தீர்வு காணவும், மின் தடை, மின்சாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க, மின் துறை அமைச்சர் சுனில்

பெங்களூரு:மின் தடை, மின்சாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க, 11 'வாட்ஸ் ஆப்' எண்களை, மின் துறை அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் மின்சாரம் தொடர்பான தகவல்களுக்கு '1912' என்ற எண் இயங்கி வருகிறது. ஆனால், அவசர நேரத்தில் இந்த எண் கிடைப்பதில்லை அல்லது தாமதமாகிறது.. இப் பிரச்னைக்கு தீர்வு காணவும், மின் தடை, மின்சாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க, மின் துறை அமைச்சர் சுனில் குமார் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, 11 மாவட்டங்களுக்கான 'வாட்ஸ் ஆப்' எண்கள் அறிவிக்கப்பட்டன. பெங்களூரு நகரத்துக்கு உட்பட்ட தெற்கில் 82778 84011; மேற்கில் 82778 84012; கிழக்கில் 83778 84013; வடக்கில் 82778 84014; கோலாரில் 82778 84015.சிக்கபல்லாபூரில் 82778 84016; பெங்களூரு ரூரலுக்கு 82778 84017; ராம்நகருக்கு 82778 84018; துமகூருக்கு 82778 84019; சித்ரதுர்காவுக்கு 82778 84020; தாவணகரேவுக்கு 82778 84021 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X