சென்னை வர்த்தக மையத்தில் தனியார் சார்பில் ராணுவ கண்காட்சி

Added : மே 24, 2022 | |
Advertisement
சென்னை : சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில், சிறு, குறு, நடுத்தர தொழில்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், தனியார் சார்பில் நடத்தப்படும் ராணுவ கண்காட்சி நாளை முதல் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது.ஸ்வதந்த்ரா அறக்கட்டளை, டிட்கோ, லகு உத்யோக் பாரதியுடன் இணைந்து சென்னையை மையமாக கொண்ட சிந்தனைக் குழு, பாதுகாப்பு துறை பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆகியவை

சென்னை : சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில், சிறு, குறு, நடுத்தர தொழில்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், தனியார் சார்பில் நடத்தப்படும் ராணுவ கண்காட்சி நாளை முதல் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஸ்வதந்த்ரா அறக்கட்டளை, டிட்கோ, லகு உத்யோக் பாரதியுடன் இணைந்து சென்னையை மையமாக கொண்ட சிந்தனைக் குழு, பாதுகாப்பு துறை பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை நடத்துகின்றன. ராணுவ இணையமைச்சர் அஜய்பட் கண்காட்சியை துவக்கி வைக்கிறார். 28ம் தேதி நடக்கும் நிறைவு நாள் விழாவில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.கண்காட்சி குறித்து, ஸ்வதந்த்ரா அறக்கட்டளையின் நிறுவனர் ராமசுப்ரமணியன் கூறியதாவது:வணிக வாய்ப்புகளை உருவாக்குவதற்காக, வர்த்தகர்கள் சந்திப்பு ஏற்படுத்துவதன் வாயிலாக சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களை, ராணுவ துறை உற்பத்தியாளர்களுடன் இணைப்பதே இந்த கண்காட்சியின் பிரதான நோக்கம்.மூன்று நாள் கண்காட்சியில், 250 அரங்குகள் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோராலும், 50 க்கும் மேற்பட்ட அரங்குகள் ராணுவ பொதுத்துறை நிறுவனங்களாலும் அமைக்கப்படுகின்றன.

இந்த கண்காட்சியில், 4,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம். கண்காட்சி வாயிலாக இத்துறையின் நுண்தொழில்நுட்பத்தை அறியுமுடியும்.இவ்வாறு கூறினார்.இந்நிகழ்ச்சியில் வழிகாட்டல் குழுவின் தலைவர் சீதாராமன் கூறியதாவது:இது, நாட்டிலேயே முதல் முறையாக, தனியார் துறை நடத்தும் ராணுவ கண்காட்சி. மத்திய அரசின் 'ஆத்மநிர்பர் பாரத்' பார்வையை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, நம் நாட்டின் சுயசார்பு தன்மையை விரிவுபடுத்தும் வகையில் அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.

லகு உத்யோக் பாரதியின் தேசிய துணைத் தலைவர் ஹரிஹரன் கூறியதாவது:சமீபத்திய மாதங்களில், மத்திய அரசு பல பாதுகாப்பு உபகரணக் கூறுகளை உள்நாட்டுமயமாக்கலுக்காக அறிவித்துள்ளது. இது சிறு, குறு, நடுத்த தொழில் முனைவோர், பெரிய கார்ப்பரேட்கள், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள், 'சப்ளையர்'களாக பாதுகாப்பு உற்பத்தித் துறையில் நுழைவதைத் ஊக்குவிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.இந்த கண்காட்சியில் எச்.ஏ.எல்., - பி.இ.எம்.எல்., - பாரத் டைனமிக்ஸ், கனரக வாகன தொழிற்சாலை, இயந்திர தொழிற்சாலை, ஆயுத தொழிற்சாலை, இந்திய கடற்படை உள்நாட்டுமயமாக்கல், இந்திய கடற்படை கொள்முதல், இந்திய எல்லை விமானப்படை, இந்திய விமானப்படை உள்நாட்டுமயமாக்கல், இந்திய விமானப்படை கொள்முதல், இஸ்ரோ உள்ளிட்டவை பங்கேற்கின்றன. கண்காட்சி, நாள் முழுவதும் கருத்தரங்குகள் மற்றும் முன் பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்களின் சந்திப்பு நடக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X