கொடைக்கானலில் சாகச சுற்றுலா ; மலர் கண்காட்சியில் அமைச்சர் தகவல்

Added : மே 24, 2022 | |
Advertisement
கொடைக்கானல் : ''கொடைக்கானல் மன்னவனுாரில், 1.75 கோடி ரூபாயில் சாகச சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்படும்,'' என, சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 59வது மலர் கண்காட்சி துவக்க விழாவில் அவர் பேசியதாவது:கொடைக்கானல் மன்னவனுாரில், 1.75 கோடி ரூபாயில் சாகச சுற்றுலா அமைக்கப்பட உள்ளது. வில்பட்டி சின்னபள்ளத்தில், 1.25 ஏக்கரில் ஹெலிகாப்டர்
கொடைக்கானலில் சாகச சுற்றுலா ;  மலர் கண்காட்சியில் அமைச்சர் தகவல்


கொடைக்கானல் : ''கொடைக்கானல் மன்னவனுாரில், 1.75 கோடி ரூபாயில் சாகச சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்படும்,'' என, சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 59வது மலர் கண்காட்சி துவக்க விழாவில் அவர் பேசியதாவது:கொடைக்கானல் மன்னவனுாரில், 1.75 கோடி ரூபாயில் சாகச சுற்றுலா அமைக்கப்பட உள்ளது.

வில்பட்டி சின்னபள்ளத்தில், 1.25 ஏக்கரில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட உள்ளது.ஹெலிகாப்டரில் சுற்றி பார்க்க 'ஜாய் ரைடு' வசதியும் ஏற்படுத்தப்படும். கேபிள் கார் திட்டம் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.சுற்றுலா இடங்களில் 'டென்ட்' அமைத்து தங்குவது தொடர்பாக, ஒரு மாதத்திற்குள் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், கூட்டுறவு அமைச்சர் பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உட்பட பலர் பங்கேற்றனர்.

மலர் கண்காட்சியில் லட்சக்கணக்கான கார்னேசன், ஹைட்ரான்ஜியா, சைப்ரஸ் மலர்களால் செதுக்கப்பட்ட மயில், டைனோசர், சிலந்தி மனிதன், பூண்டு, திருவள்ளுவர் சிலை பயணியரை கவர்ந்தன.உள் நாட்டு மலர்கள், காய்கறி, பழங்களால் உருவாக்கப்பட்ட சிங்கம், தமிழ் அன்னை, மரங்கொத்தி சிற்பங்களுடன் பல்வேறு துறை சார்ந்த ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளன. மலர் கண்காட்சி வரும் 29 வரையும், கோடை விழா ஜூன் 2 வரையும் நடக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X