வட்டி பாக்கி வைத்த தம்பி அண்ணனுக்கு அடி, உதை

Added : மே 24, 2022 | |
Advertisement
தட்சிண கன்னடா:தம்பி வாங்கிய கடனுக்கான கூடுதல் வட்டித் தொகையை கொடுக்காததால், அவரது சகோதரரை தாக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தட்சிண கன்னடா மங்களூரு உச்சிலா முல்லுகுட்டேவைச் சேர்ந்தவர் ஆரிப், 38. நேற்று அதிகாலை மீன் பிடிக்கும் பகுதிக்கு, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். முல்லுகுட்டே அருகே செல்லும் போது, காரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து, அவரை

தட்சிண கன்னடா:தம்பி வாங்கிய கடனுக்கான கூடுதல் வட்டித் தொகையை கொடுக்காததால், அவரது சகோதரரை தாக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தட்சிண கன்னடா மங்களூரு உச்சிலா முல்லுகுட்டேவைச் சேர்ந்தவர் ஆரிப், 38. நேற்று அதிகாலை மீன் பிடிக்கும் பகுதிக்கு, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். முல்லுகுட்டே அருகே செல்லும் போது, காரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து, அவரை கடுமையாக தாக்கிவிட்டு, தப்பி சென்றனர்.
தகவலறிந்த உல்லால் போலீசார், படுகாயமடைந்த ஆரிப்பை மருத்துவமனையில் அனுமதித்தனர். முதல் கட்ட விசாரணையில், ஆரிப் சகோதரர் கரீம், 35, நவுபல் என்பவரிடம் 60 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் கடனை அடைக்க முடியவில்லை.இதனால், நவுபல், கரீமின் மீன் பிடிக்கும் உபகரணங்களை எடுத்து சென்றார்.
இதையடுத்து, கடன் தொகையை முழுதையும் கொடுத்துவிட்டு, உபகரணங்களை மீட்டார். ஆனால், ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி, வட்டி தொகை 7,000 ரூபாய் வழங்கவில்லை. இது தொடர்பாக, ஆரிப், கரீம் மற்றும் நவுபல் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் கோபமடைந்த நவுபல், அவரது நண்பர்கள் சாதிக் உட்பட நான்கு பேர், ஆரிப்பை கொலை செய்யும் நோக்கில், தாக்கியது தெரியவந்தது. தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X