கால்வாய் சீரமைப்பு பணியில் கான்கிரீட் தளம் இடிந்து விபத்து| Dinamalar

கால்வாய் சீரமைப்பு பணியில் கான்கிரீட் தளம் இடிந்து விபத்து

Added : மே 24, 2022 | |
ஸ்ரீநகர்:கால்வாய் சீரமைக்கும் பணியின் போது கான்கிரீட் தளம் இடிந்து விழுந்ததில், எட்டு தொழிலாளிகள் காயம் அடைந்தனர். இதில் ஒருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.பெங்களூரில் மழை காலம் ஆரம்பித்துள்ளதால், மாநகராட்சி சார்பில் கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. அதுபோல ஸ்ரீநகரில் உள்ள காளிதாசா சதுக்கத்தில் ராஜா கால்வாய் சீரமைக்கும் பணிகள் நடக்கின்றன. நேற்று
கால்வாய் சீரமைப்பு பணியில் கான்கிரீட் தளம் இடிந்து விபத்து

ஸ்ரீநகர்:கால்வாய் சீரமைக்கும் பணியின் போது கான்கிரீட் தளம் இடிந்து விழுந்ததில், எட்டு தொழிலாளிகள் காயம் அடைந்தனர். இதில் ஒருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பெங்களூரில் மழை காலம் ஆரம்பித்துள்ளதால், மாநகராட்சி சார்பில் கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. அதுபோல ஸ்ரீநகரில் உள்ள காளிதாசா சதுக்கத்தில் ராஜா கால்வாய் சீரமைக்கும் பணிகள் நடக்கின்றன. நேற்று கால்வாயின் மீது கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடந்தன. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திடீரென கான்கிரீட் தளத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் கால்வாயில் விழுந்தனர். இவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீர் காசிம், 24 என்பவர், நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.விபத்துக்கு தரமற்ற பணிகளே காரணம் என கூறப்படுகிறது.
பணிகள் நடக்கும் போதும் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் அருகில் இருக்கவில்லை. விபத்து நடந்த பின்னும் யாரும் வரவில்லை. அங்கிருந்த பொதுமக்களே, தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதிகாரிகளின் நடவடிக்கைக்கைக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X