டாக்டர்களுக்கு பணியிட மாறுதல் ஆணை| Dinamalar

டாக்டர்களுக்கு பணியிட மாறுதல் ஆணை

Added : மே 24, 2022 | |
சென்னை : கலந்தாய்வு முறையில், டாக்டர்களுக்கு பணியிட மாறுதல் ஆணைகளை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.பின், அவர் அளித்த பேட்டி:கடந்த ஓராண்டாக, 14 ஆயிரத்து 156 பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதாவது, 3,585 டாக்டர்கள், 10 ஆயிரத்து 847 செவிலியர்கள், 324 களப் பணியாளர்களுக்கு பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நேற்று முன்தினம், 1,008
டாக்டர்களுக்கு பணியிட மாறுதல் ஆணை


சென்னை : கலந்தாய்வு முறையில், டாக்டர்களுக்கு பணியிட மாறுதல் ஆணைகளை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.பின், அவர் அளித்த பேட்டி:கடந்த ஓராண்டாக, 14 ஆயிரத்து 156 பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதாவது, 3,585 டாக்டர்கள், 10 ஆயிரத்து 847 செவிலியர்கள், 324 களப் பணியாளர்களுக்கு பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் நேற்று முன்தினம், 1,008 டாக்டர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு வெளிப்படைத் தன்மையோடு நடந்துள்ளது. ஒரே நேரத்தில் அதிகளவில் பணியிட மாறுதல்கள் நடப்பதை அறிந்து, மருத்துவ சங்கங்கள், தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றன. பேரிடர் காலத்தில் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்ட டாக்டர்களுக்கு, இந்த இடமாறுதல் மகிழ்ச்சியான பரிசாக அமைந்துள்ளது.

இது, எதிர்காலத்தில் அவர்கள் ஈடுபாட்டுடன் பணியாற்ற உதவும்.அதேபோன்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில், டாக்டர், செவிலியர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு, ஜூன் முதல் வாரத்தில் பணியிட மாறுதல்கள் வழங்கப்பட உள்ளன.டாக்டர்கள் உள்ளிட்ட, 4,308 காலிப் பணியிடங்களை நிரப்ப, மருத்துவ தேர்வு வாரியம், நான்கு மாத அவகாசம் கேட்டுள்ளது. வரும் செப்டம்பருக்குள் அவை நிரப்பப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு மற்றும் மருத்துவ கல்லுாரி முதல்வர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X