பிரதமர் மோடியை விமர்சிக்க ஸ்டாலின் தடை!

Updated : மே 24, 2022 | Added : மே 24, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, நாளை மறுநாள் (மே 26) சென்னை வருவதால், சமூக ஊடகங்களில் அவரை விமர்சிப்பதை தவிர்க்கும்படி, தி.மு.க.,வினரை, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது.மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு முக்கிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நாளை மறுநாள் சென்னை வருகிறார். நேரு விளையாட்டரங்கில், இதற்கான விழா நடைபெறுகிறது. கடந்த 2014-ல் மோடி
Modi,Narendra Modi,CMStalin, MK Stalin,நரேந்திர மோடி,மோடி,ஸ்டாலின்

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, நாளை மறுநாள் (மே 26) சென்னை வருவதால், சமூக ஊடகங்களில் அவரை விமர்சிப்பதை தவிர்க்கும்படி, தி.மு.க.,வினரை, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது.

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு முக்கிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நாளை மறுநாள் சென்னை வருகிறார். நேரு விளையாட்டரங்கில், இதற்கான விழா நடைபெறுகிறது. கடந்த 2014-ல் மோடி பிரதமரானது முதல், அவர் தமிழகம் வரும் போதெல்லாம், அவரை தி.மு.க.,வினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


latest tamil news



'கோ பேக் மோடி' என, பிரதமரை திரும்பிப் போகுமாறு, சமூக ஊடகங்களில், தி.மு.க.,வினர் பதிவிடுவதும், அதற்கு பதிலடியாக, 'வெல்கம் மோடி' என, பா.ஜ.,வினர் வரவேற்று பதிவிடுவதும் வழக்கமாக இருந்தது. தற்போது, தி.மு.க., ஆட்சியில் உள்ளதால், பிரதமர் மோடி வருகைக்கு எதிராக, சமூக ஊடகங்களில் விமர்சிப்பதை, சில நாட்களுக்கு தவிர்க்கும்படி, தி.மு.க., நிர்வாகிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
30-மே-202205:58:38 IST Report Abuse
NicoleThomson இருபத்தி ஆறாம் புலிகேசிக்கு எவ்வளவு ஆசை
Rate this:
Cancel
25-மே-202212:13:34 IST Report Abuse
theruvasagan இந்த மாதிரி விஷயங்களில் வேண்டாம்னு சொன்னா வேணும்னு அர்த்தம். சந்தேகமிருந்தா ஸ்தாபகர் முத்தமிழ் வித்தவர் அகராதியில தேடிப் பாருங்க.
Rate this:
Cancel
25-மே-202210:59:49 IST Report Abuse
பாமரன் இப்போ மோடி என்ன செஞ்சுட்டார்ன்னு கோ பேக் சொல்லனும்...🤔
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X