ஐந்தாண்டுகளாக ஆசிரியர் நியமிக்காத அரசுப்பள்ளி!| Dinamalar

ஐந்தாண்டுகளாக ஆசிரியர் நியமிக்காத அரசுப்பள்ளி!

Added : மே 24, 2022 | |
கோவை:கோவை தொண்டாமுத்துார் ஐ.ஓ.பி., காலனியில் செயல்படும் துவக்கப்பள்ளிக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆசிரியர் நியமிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.தொடக்க கல்வியின் தரத்தை மேம்படுத்த, முறையாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டியது அவசியம். கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல துவக்கப்பள்ளிகள் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளாகவே செயல்படுகின்றன.தொண்டாமுத்துார் ஐ.ஓ.பி.,காலனி

கோவை:கோவை தொண்டாமுத்துார் ஐ.ஓ.பி., காலனியில் செயல்படும் துவக்கப்பள்ளிக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆசிரியர் நியமிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.தொடக்க கல்வியின் தரத்தை மேம்படுத்த, முறையாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டியது அவசியம். கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல துவக்கப்பள்ளிகள் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளாகவே செயல்படுகின்றன.
தொண்டாமுத்துார் ஐ.ஓ.பி.,காலனி பள்ளியில் புதிய கட்டடம், வகுப்பறை, சுற்றுச்சுவர் என அனைத்து வசதிகளும் உள்ளன. 49 மாணவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கின்றனர். ஆனால், மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்ட ஒரு ஆசிரியர் மட்டுமே, இதுவரை அனைத்து மாணவர்களையும் கையாண்டு வந்துள்ளார்.அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'கல்வித்தரம் மேம்பட அடிப்படை கல்வி மிகவும் முக்கியம். அரசு பள்ளிகளில் ஓராசிரியர், ஈராசிரியர் பணியமர்த்தி அனைத்து மாணவர்களுக்கும் பாடம் எடுக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
இடைவெளி, மதிய உணவு நேரம் கழித்தால், ஐந்து மணி நேரம் மட்டுமே பாடங்கள் நடத்த முடியும். ஐந்து வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டங்களையும் ஓராசிரியர் எவ்வாறு ஈடுபாட்டுடன் நடத்த முடியும். தனிப்பட்ட கவனம் யாருக்கும் தர முடியாது. கடமைக்கு பாடம் எடுக்க வேண்டியுள்ளது. கோவையில் மாற்றுப்பணி வழங்கி ஓராசிரியர் பள்ளி 10ம், ஈராசிரியர் பள்ளி 200க்கு மேலும் உள்ளது. தொண்டாமுத்துார் பள்ளியில், ஐந்தாண்டுகளாக இதே நிலைதான் உள்ளது' என்றார்.புதிய கல்வியாண்டு துவங்கும் முன் ஐ.ஓ.பி., காலனிதொண்டாமுத்துார் துவக்கப்பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர், தலைமையாசிரியரை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X