பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு:அகில இந்திய ஜவுளிக்கூட்டமைப்பு வரவேற்பு

Added : மே 24, 2022 | |
Advertisement
கோவை:பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரியைக் குறைத்ததற்கும், ஸ்பான்டெக்ஸ் நூல் மீதான வரியை நீக்கியதற்கும், அகில இந்திய ஜவுளிக்கூட்டமைப்பு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.இது குறித்து, அகில இந்திய ஜவுளிக்கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் அறிக்கை: விலைவாசியைப் பாதிக்கும் பணவீக்கத்திலிருந்து சாமானியர்களுக்கு மட்டுமல்லாமல், உற்பத்தித் துறைக்கும் அவசர நிவாரணம்

கோவை:பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரியைக் குறைத்ததற்கும், ஸ்பான்டெக்ஸ் நூல் மீதான வரியை நீக்கியதற்கும், அகில இந்திய ஜவுளிக்கூட்டமைப்பு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.இது குறித்து, அகில இந்திய ஜவுளிக்கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் அறிக்கை: விலைவாசியைப் பாதிக்கும் பணவீக்கத்திலிருந்து
சாமானியர்களுக்கு மட்டுமல்லாமல், உற்பத்தித் துறைக்கும் அவசர நிவாரணம் வழங்க, மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது.பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், 9 கோடி பயனாளிகளுக்கு எல்.பி.ஜி., சிலிண்டர்கள் மீது 200 ரூபாய் மானியம் வழங்குதல், விவசாயிகளுக்கு கூடுதல் உர மானியம் மற்றும் விலைக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மற்றும் சாமானியர்களின் கவலைகள் குறித்து, அரசாங்கம் மிகுந்த அக்கறையுடன் உள்ளது.பெட்ரோல் லிட்டருக்கு, 9.5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 7 ரூபாய்க்கும் குறைக்கப்பட்டதால், நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.
இந்த விலையை மேலும் குறைக்க வேண்டும்.எலாஸ்டோமெரிக் பிலமென்ட் நூல் மீதான கூடுதல் வரியை நீக்கியதால், ஏற்றுமதி பல மடங்கு அதிகரிக்கும். பிளாஸ்டிக் பொருட்களின் மூலப்பொருட்கள் மற்றும் அவற்றின் இடைத்தரகர்கள்மீதான சுங்க வரியை குறைப்பது, இரும்பு இடைத்தரகர்கள் மீதான சுங்க வரி குறைப்பு மற்றும் சில மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைப்பது வரவேற்கத்தக்கது.இந்நடவடிக்கைகள் ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் மற்றும் துணை உற்பத்தியாளர்களுக்கு விலையைக் குறைக்க உதவும். இது ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலுக்கு பெருமளவில் பயனளிக்கும். இவ்வாறு, ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X