மானாமதுரை :மானாமதுரை சுந்தரபுரம் அக்ரஹார தெரு சுந்தர விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு கோயிலில் கலச நீர் வைத்து யாகம் நடத்தப்பட்டு பூர்ணாஹூதி நடைபெற்றது.தொடர்ந்து விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றன.விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் ராஜேந்திரபிரசாத்,தமிழரசி ஆகியோர் செய்து இருந்தனர்.