குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறந்தார் முதல்வர்

Updated : மே 25, 2022 | Added : மே 24, 2022 | |
Advertisement
சேலம் : குறுவை சாகுபடியை முன்கூட்டியே துவங்க வசதியாக, மேட்டூர் அணையில் இருந்து நேற்று முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.மேட்டூர் அணையில் ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்படும். காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், மேட்டூர் அணை நீர்மட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, அணை நீர்மட்டம்,
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறந்தார் முதல்வர்


சேலம் : குறுவை சாகுபடியை முன்கூட்டியே துவங்க வசதியாக, மேட்டூர் அணையில் இருந்து நேற்று முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.மேட்டூர் அணையில் ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்படும். காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், மேட்டூர் அணை நீர்மட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, அணை நீர்மட்டம், 117.76 அடி, நீர் இருப்பு 89.94 டி.எம்.சி.,யாக இருந்தது.

அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 508 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.குறுவை சாகுபடிக்கு முன்னதாகவே தண்ணீர் திறக்கப்படும் என, ஏற்கனவே அறிவித்தபடி, 19 நாளுக்கு முன், நேற்று மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், காலை 11:14 மணிக்கு பொத்தானை அழுத்தி, 8 கண் மதகை திறந்து வைத்தார். தொடர்ந்து அணையில் மலர், நவதானியங்களை துாவி காவிரித்தாயை வணங்கினார்.முதல் கட்டமாக, 3,000 கனஅடி தண்ணீர் வெளியேறிய நிலையில், படிப்படியாக உயர்ந்து மாலையில், 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அதே அளவு, ஜூன் இறுதி வரை வினியோகிக்கப்படும். ஜூலை முதல், 10 ஆயிரம் கனஅடியில் இருந்து படிப்படியாக உயர்ந்து, 16 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படும். ஆகஸ்டில், 18 ஆயிரம் கனஅடி முதல் தேவைக்கேற்ப திறக்கப்படும்.

செப்., 15 வரை, குறுவை சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படும். இதன் மூலம் நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், 4 லட்சத்து 91 ஆயிரத்து 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.மேலும், கடலுார், அரியலுார் மாவட்டங்களில், 30 ஆயிரத்து, 800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். குறுவை சாகுபடிக்கு, 125 டி.எம்.சி., தண்ணீர் தேவை. அதில் மேட்டூர் அணையில் இருந்து, 99.74 டி.எம்.சி., தண்ணீர் வழங்குவது போக, மீதி 25.26 டி.எம்.சி., தண்ணீர், பருவமழை, நிலத்தடி நீர் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.தொடர்ந்து, சம்பா, தாளடி பாசனத்துக்கு செப்., 15 முதல் ஜன., 26 வரை, மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் மூலம், 12 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டு பகுதிகள் பாசன வசதி பெறும். அதில் அணையில் இருந்து, 108.50 டி.எம்.சி., தண்ணீர், வடகிழக்கு பருவமழை, நிலத்தடி நீர் மூலம், 97.10 டி.எம்.சி., தண்ணீரால், அதன் தேவை ஈடு செய்யப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

77 ஆண்டுக்கு பின் முதல் முறை

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு, 88 ஆண்டில் குறிப்பிட்ட ஜூன் 12ல் திட்டமிட்டபடி, இதுவரை 18 ஆண்டுகள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதே நேரம், கோடை காலமான மே மாதத்தில் 1942, 1943, 1944, 1945 என, வரிசையாக நான்கு ஆண்டாக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது, 77 ஆண்டுகளுக்கு பின், மே மாதம் குறுவை சாகுபடிக்கு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X