விலை உயர்வால் ரேஷனில் தக்காளி : அமைச்சர் தகவல்

Added : மே 25, 2022 | |
Advertisement
கொடைக்கானல் : ''தமிழகத்தில் அதிகரித்து வரும் தக்காளி விலையை கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறை மூலம் ரேஷன் கடைகளில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என கொடைக்கானலில் அமைச்சர் பெரியசாமி கூறினார்.அவர் கூறியதாவது: கொடைக்கானலை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மாற்றும் நடவடிக்கையில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். இங்குள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும்


கொடைக்கானல் : ''தமிழகத்தில் அதிகரித்து வரும் தக்காளி விலையை கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறை மூலம் ரேஷன் கடைகளில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என கொடைக்கானலில் அமைச்சர் பெரியசாமி கூறினார்.அவர் கூறியதாவது: கொடைக்கானலை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மாற்றும் நடவடிக்கையில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.

இங்குள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் பராமரிக்கும் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் பார்வையிட்டுள்ளார். தமிழகத்தில் கூட்டுறவு தேர்தல் நடத்த வேண்டுமெனில் கவர்னர் கையெழுத்திட வேண்டும். கொடைக்கானலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும். அதற்கான இடத்தை தேர்வு செய்ய முதல்வரிடம் ஆலோசிக்கப்படும் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X