போலி கையெழுத்திட்டு நகை கடன்கணவர், மாமனார் மீது நடிகை புகார்| Dinamalar

போலி கையெழுத்திட்டு நகை கடன்கணவர், மாமனார் மீது நடிகை புகார்

Added : மே 25, 2022 | |
மைசூரு:தன் கையெழுத்தை போலியாக போட்டு, வங்கி கணக்கை பயன்படுத்தி, தங்க நகை கடன் பெற்றதாக, கணவர், மாமனார் மீது கன்னட நடிகை சைத்ரா ஹள்ளிகேரி போலீசில் புகார் செய்துள்ளார்.கன்னட திரைப்பட நடிகை சைத்ரா ஹள்ளிகேரி, 36. இவர், 'குரு சிஷ்யா, ஸ்ரீதனம்மா தேவி' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், பாலாஜி, 40, என்பவருக்கும் 2006ல் திருமணம் நடந்தது. இரு குழந்தைகள் உள்ளனர்.

மைசூரு:தன் கையெழுத்தை போலியாக போட்டு, வங்கி கணக்கை பயன்படுத்தி, தங்க நகை கடன் பெற்றதாக, கணவர், மாமனார் மீது கன்னட நடிகை சைத்ரா ஹள்ளிகேரி போலீசில் புகார் செய்துள்ளார்.
கன்னட திரைப்பட நடிகை சைத்ரா ஹள்ளிகேரி, 36. இவர், 'குரு சிஷ்யா, ஸ்ரீதனம்மா தேவி' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், பாலாஜி, 40, என்பவருக்கும் 2006ல் திருமணம் நடந்தது. இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மைசூரு ஜெயலட்சுமிபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை சைத்ரா ஹள்ளிகேரி, தன் கணவர், மாமனார் மீது புகார் அளித்துள்ளார்.
அதில், எனக்கு தெரியாமலேயே சவுத் இந்தியா வங்கியில், என் வங்கி கணக்கின் மூலம், என் கையெழுத்தை போலியாக இட்டு, தங்க நகை கடன் வாங்கியுள்ளனர். 'இதற்கு வங்கி கிளை மேலாளரும் உடந்தையாக உள்ளார். இது பற்றி கேட்ட போது, கணவரும், மாமனாரும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்' என, குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, அவரது கணவர் பாலாஜி, மாமனார் பொத்தராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.ஏற்கனவே தன்னை அடித்ததாகவும், சீரியலில் நடித்து சம்பாதித்த பணத்தை பறித்து கொண்டதாகவும் கணவர் பாலாஜி மீது 2018ல் சைத்ரா, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இரு வீட்டினரும் அவரை சமாதானம் செய்து, புகாரை வாபஸ் பெற வைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X