செய்யூர்:செய்யூர் அருகே, வேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு, 24. கடந்தாண்டு, இளங்கலை படிப்பை முடித்து, ஆறு மாதங்களாக வேலை தேடி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று, வேலைக்கு போகச் சொல்லி, தாய் கண்டித்ததால், மன உளைச்சலில் இருந்த பாபு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டின் மின்விசிறியில் கயிறு வாயிலாக துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்து சென்ற செய்யூர் போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.