சாலையில் சிதறிய மிளகாய் சாஸ்கண் எரிச்சலால் மக்கள் அவதி| Dinamalar

சாலையில் சிதறிய 'மிளகாய் சாஸ்'கண் எரிச்சலால் மக்கள் அவதி

Added : மே 25, 2022 | |
குடகு:தாவணகரேயிலிருந்து கேரளாவுக்கு ஏற்றி செல்லப்பட்ட மிளகு, 'சாஸ்' கசிந்ததால், குடகு சித்தாபுரா, விராஜ்பேட் பகுதி மக்களின் கண்களில் திடீரென எரிச்சல், இருமல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.குடகு மடிகேரியிலுள்ள சித்தாபுரா, விராஜ்பேட் பகுதி மக்களுக்கு நேற்று காலை திடீரென கண் எரிச்சல், இருமல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பலரும் உடனடியாக மருத்துவமனைக்கு
சாலையில் சிதறிய 'மிளகாய் சாஸ்'கண் எரிச்சலால் மக்கள் அவதி

குடகு:தாவணகரேயிலிருந்து கேரளாவுக்கு ஏற்றி செல்லப்பட்ட மிளகு, 'சாஸ்' கசிந்ததால், குடகு சித்தாபுரா, விராஜ்பேட் பகுதி மக்களின் கண்களில் திடீரென எரிச்சல், இருமல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குடகு மடிகேரியிலுள்ள சித்தாபுரா, விராஜ்பேட் பகுதி மக்களுக்கு நேற்று காலை திடீரென கண் எரிச்சல், இருமல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பலரும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றனர். இதையடுத்து, சமூக வலைதளத்தில் இச்சம்பவம் பரவி, அனைவரும் முகமூடி அணிந்து செல்லுமாறு செய்தி பரவியது.
தகவலறிந்த சுகாதாரம், குடும்ப நலத்துறை அதிகாரிகள், பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சாலையில் சிவப்பு நிறத்தில் சாஸ்' பரவியிருந்தது. அதை பின் தொடர்ந்து சென்ற போது, கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த லாரியிலிருந்து கொட்டி செல்வதை பார்த்தனர்.உடனடியாக குடகு - கேரளா எல்லையான மக்குட்டா சோதனை சாவடி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, லாரியை தடுத்து நிறுத்தினர்.
விசாரணையில், தாவணகரேயிலிருந்து கேரளா எர்ணாகுளத்துக்கு குடகு வழியாக, 20 பேரல் 'பைதகி மிளகாய்' கொண்டு செல்வது தெரியவந்தது.மடிகேரி ரூரல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவிகுமார் கூறுகையில், ''நெல்லிஹுட்டுகேரி அருகே வரும் போது, தனியார் பஸ் ஒன்று வழிவிட்டபோது, உரசியதில் இரண்டு பேரல்கள் சேதமடைந்து கசிய துவங்கியுள்ளது.'
'தேவையான அனைத்து ஆவணங்கள் சரியாக உள்ளன. ஆனாலும், பொது மக்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியற்காக, லாரி பறிமுதல் செய்யப்பட்டு, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் வழிந்த மிளகு சாஸ், மைசூரிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X