காலி செய்த தனியார் ஆம்புலன்ஸ்கள்---

Added : மே 25, 2022 | |
Advertisement
ராஜபாளையம், :தினமலர் செய்தி எதிரொலியாக ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை எதிரே தேசிய நெடுஞ்சாலை அபாய வளைவில் நிறுத்தப்பட்டு வந்த தனியார் ஆம்புலன்ஸ்கள் இடத்தை காலி செய்து கிளம்பின.ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை அரசு பொது மருத்துவமனை முன்பு இரண்டு பக்கமும் பத்திற்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்கள் ஆக்கிரமித்த படி நின்றதால் வளைவுகளில் விபத்து அபாயம் ஏற்பட்டு
காலி செய்த தனியார் ஆம்புலன்ஸ்கள்---

ராஜபாளையம், :தினமலர் செய்தி எதிரொலியாக ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை எதிரே தேசிய நெடுஞ்சாலை அபாய வளைவில் நிறுத்தப்பட்டு வந்த தனியார் ஆம்புலன்ஸ்கள் இடத்தை காலி செய்து கிளம்பின.ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை அரசு பொது மருத்துவமனை முன்பு இரண்டு பக்கமும் பத்திற்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்கள் ஆக்கிரமித்த படி நின்றதால் வளைவுகளில் விபத்து அபாயம் ஏற்பட்டு வந்தது. ஏற்கனவே இப்பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து பொதுமக்கள் அரசு மருத்துவர்கள் புகார் தெரிவித்த படி இருந்தனர்.இது குறித்து 'தினமலர்' நாளிதழில் வெளியானது. தேசிய நெடுஞ்சாலை இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வாகனங்களை அந்த இடத்தில் இருந்து அகற்ற உத்தரவிட்டதோடு விதி மீறலில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிய எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து நெடுஞ்சாலை இரண்டு பக்கமும் போக்குவரத்துக்கு தடையின்றி அகலமாக மாறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X