மீண்டும் சுட்டெரித்தது வெயில்; மின் நுகர்வு 4 கோடி யூனிட் உயர்வு| Dinamalar

மீண்டும் சுட்டெரித்தது வெயில்; மின் நுகர்வு 4 கோடி யூனிட் உயர்வு

Added : மே 25, 2022 | |
சென்னை : கோடை வெயில் மீண்டும் சுட்டெரிப்பதால், தமிழக மின் நுகர்வு நேற்று முன்தினம் ஒரே நாளில், 4.06 கோடி யூனிட்கள் அதிகரித்துள்ளது.தமிழகம் முழுதும் ஒரு நாள் அதாவது, 24 மணி நேரமும் பயன்படுத்தும் மின்சார அளவு, மின் நுகர்வு எனப்படுகிறது. தினமும் சராசரியாக, 30 கோடி யூனிட்கள் என்றளவில் உள்ள தமிழக மின் நுகர்வு, கோடை காலத்தில், 35 கோடி யூனிட்களை தாண்டும்.அதன்படி, நடப்பாண்டு ஏப்., 29ம்


சென்னை : கோடை வெயில் மீண்டும் சுட்டெரிப்பதால், தமிழக மின் நுகர்வு நேற்று முன்தினம் ஒரே நாளில், 4.06 கோடி யூனிட்கள் அதிகரித்துள்ளது.தமிழகம் முழுதும் ஒரு நாள் அதாவது, 24 மணி நேரமும் பயன்படுத்தும் மின்சார அளவு, மின் நுகர்வு எனப்படுகிறது.

தினமும் சராசரியாக, 30 கோடி யூனிட்கள் என்றளவில் உள்ள தமிழக மின் நுகர்வு, கோடை காலத்தில், 35 கோடி யூனிட்களை தாண்டும்.அதன்படி, நடப்பாண்டு ஏப்., 29ம் தேதி எப்போதும் இல்லாத வகையில், 38.80 கோடி யூனிட்களாக அதிகரித்து சாதனை படைத்தது; இதுவரை இதுவே உச்ச அளவாக உள்ளது. 'அசானி' புயல் காரணமாக, இம்மாத துவக்கத்தில் இருந்து பல மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. இதனால், வீடுகளில், 'ஏசி' சாதனங்களின் பயன்பாடு குறைந்ததால், மின் நுகர்வு, 30 கோடி - 32 கோடி யூனிட்களாக குறைந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மின் நுகர்வு, 30.41 கோடி யூனிட்கள் என்றளவில் இருந்தது. திங்களன்று அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரித்தது.இதையடுத்து நேற்று முன்தினம் ஒரே நாளில் மின் நுகர்வு, 4.06 கோடி யூனிட்கள் உயர்ந்து, 34.47 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து வெயில் அதிகம் இருப்பதால், அதற்கு ஏற்ப மின் நுகர்வும் அதிகரிக்கும்.காற்றாலை சீசன் துவங்கியதால், தற்போது காற்றாலைகளில் இருந்து தினமும், 2,500 மெகா வாட் மேல் மின்சாரம் கிடைக்கிறது. இதனால், மின் தேவையை பூர்த்தி செய்வதில், மின் வாரியத்திற்கு சிரமம் இல்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X