அண்ணாமலையை சீண்ட வேண்டாம்:பா.ஜ., பட்டியலின தலைவர் எச்சரிக்கை!| Dinamalar

அண்ணாமலையை சீண்ட வேண்டாம்:பா.ஜ., பட்டியலின தலைவர் எச்சரிக்கை!

Added : மே 25, 2022 | |
கடலுார் : ''பா.ஜ., தலைவர் அண்ணாமலையை சீண்டி பார்க்க வேண்டாம்,'' என, பா.ஜ., பட்டியலின மாநில தலைவர் தடா பெரியசாமி கூறினார்.கடலுாரில் அவர் அளித்த பேட்டி:பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்ததை தொடர்ந்து, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் வரியை குறைத்துள்ளன.. ஆனால், தமிழக அரசு வரியை குறைக்கவில்லை. விலையை குறைக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என,



கடலுார் : ''பா.ஜ., தலைவர் அண்ணாமலையை சீண்டி பார்க்க வேண்டாம்,'' என, பா.ஜ., பட்டியலின மாநில தலைவர் தடா பெரியசாமி கூறினார்.கடலுாரில் அவர் அளித்த பேட்டி:பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்ததை தொடர்ந்து, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் வரியை குறைத்துள்ளன..

ஆனால், தமிழக அரசு வரியை குறைக்கவில்லை. விலையை குறைக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.அந்த அறிவிப்பிலிருந்து நாங்கள் பின்வாங்க போவதில்லை. பிரதமரின் தமிழக வருகைக்கு பின் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும். தமிழகம் முழுதும் இருந்து 50 ஆயிரம் பேர் திரள்வோம்.

அண்ணாமலை குறித்து தமிழக மூத்த அமைச்சரான பன்னீர்செல்வம் ஒருமையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. இதுபோன்ற அவதுாறு பேச்சுகள், சட்டம் - ஒழங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும்.அமைச்சர்களின் இதுபோன்ற பேச்சுகள் தொடருமானால், 2024ம் ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலுடன், தமிழக சட்டசபை தேர்தலும் நடைபெறும் நிலை ஏற்படலாம்.பா.ஜ., 18 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது.

நம் நாட்டில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி. எங்களிடம் தி.மு.க., பூச்சாண்டி காட்ட வேண்டாம்.தமிழக அரசு பெட்ரோலிய விலையை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர ஒத்துழைக்க வேண்டும். நிர்வாக திறன் இல்லாததால் தான் விலையை குறைக்க முடியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X