சுற்றுச்சூழல் விதிமீறிய நிறுவனம் ரூ.5.50 கோடி இழப்பீடு தர உத்தரவு

Added : மே 25, 2022 | |
Advertisement
சென்னை:சென்னை புதுப்பாக்கத்தை சேர்ந்த அரவிந்த்குமார் அகர்வால், ஜனார்த்தனன் உள்ளிட்ட எட்டு பேர், பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு:செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில், தனியார் கட்டுமான நிறுவனம், 1,184 குடியிருப்புகள் கட்ட, சுற்றுச்சூழல் அனுமதி பெற்று, கூடுதலாக 990 குடியிருப்புகளை கட்டியுள்ளது.இங்கு 1,184 குடியிருப்புகளுக்காக அமைக்கப்பட்ட, கழிவு நீர்

சென்னை:சென்னை புதுப்பாக்கத்தை சேர்ந்த அரவிந்த்குமார் அகர்வால், ஜனார்த்தனன் உள்ளிட்ட எட்டு பேர், பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு:
செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில், தனியார் கட்டுமான நிறுவனம், 1,184 குடியிருப்புகள் கட்ட, சுற்றுச்சூழல் அனுமதி பெற்று, கூடுதலாக 990 குடியிருப்புகளை கட்டியுள்ளது.இங்கு 1,184 குடியிருப்புகளுக்காக அமைக்கப்பட்ட, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், 2,174 குடியிருப்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், ஜெனரேட்டரில் காற்று, ஒலி மாசு ஏற்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, கூட்டுக்குழு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளும், தனியார் கட்டுமான நிறுவனமும் அறிக்கை அளித்திருந்தன.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த, பசுமை தீர்ப்பாய நீதிபதி கே.ராமகிருஷ்ணன், நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், டீசல் ஜெனரேட்டரால், மாசு ஏற்படுவதை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை, சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் செய்யவில்லை.கூட்டுக்குழு பரிந்துரைபடி, இரண்டு மாதங்களுக்குள் இதற்கு தேவையான மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் விதிமீறலுக்காக, தனியார் கட்டுமான நிறுவனம், மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு, 5.50 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்த வேண்டும்.இரண்டு மாதங்களுக்குள் இந்த தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனம் செலுத்தாவிட்டால், மாசு கட்டுப்பாட்டு வாரியம், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.தனியார் கட்டுமான நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட, சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தை, விதிமீறல் வழக்காக, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் பரிசீலிக்க வேண்டும்.
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், ஜெனரேட்டர் ஆகியவை சரிசெய்யப்பட்ட பின், அவை குடியிருப்போர் நலச்சங்கத்தின் பொறுப்பாகும். இதில், கட்டுமான நிறுவனம், ஏதாவது ஒப்பந்த விதிகளை மீறியதாக கருதினால், குடியிருப்போர் நலச் சங்கம், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை அணுகலாம்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X