இந்தியாவிடம் ரூ.3,750 கோடி கடன் கேட்கிறது இலங்கை

Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
கொழும்பு : பெட்ரோலிய பொருட்கள் வாங்க, இந்தியாவிடம், 3,750 கோடி ரூபாய் கடன் கேட்கும் தீர்மானத்திற்கு, இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.இந்நிலையில், இலங்கை எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:அமைச்சரவை

கொழும்பு : பெட்ரோலிய பொருட்கள் வாங்க, இந்தியாவிடம், 3,750 கோடி ரூபாய் கடன் கேட்கும் தீர்மானத்திற்கு, இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.latest tamil newsஇந்நிலையில், இலங்கை எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:அமைச்சரவை கூட்டத்தில், எரிசக்தி அமைச்சகம், இந்திய எக்சிம் வங்கியிடம் இருந்து, 3,750 கோடி ரூபாய் கடன் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்தொகை, பெட்ரோலிய பொருட்கள் வாங்க பயன்படுத்தி கொள்ளப்படும். இலங்கை அரசு ஏற்கனவே இதற்காக, இந்திய எக்சிம் வங்கியிடம், 3,750 கோடி ரூபாயும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடம் இருந்து, 1,500 கோடி ரூபாயும் கடன் வாங்கியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

இந்தியா, இலங்கைக்கு 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனுதவி அளிக்க ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஏற்கனவே, 4 கோடி கிலோ டீசல் அனுப்பிய நிலையில், மேலும், 4 கோடி கிலோ பெட்ரோல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இந்தியா தெரிவித்துள்ளது.


latest tamil news
பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இலங்கை அரசு நேற்று, பெட்ரோல், டீசல் விலை முறையே, 24 சதவீதம் மற்றும் 38 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 82 ரூபாயும், டீசலுக்கு, 111 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்., 19க்குப் பின், இரண்டாவது முறையாக, பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது, வரலாறு காணாத விலை உயர்வாகும். இதன்படி, இலங்கை ரூபாய் மதிப்பில், ஒரு லிட்டர் பெட்ரோல், 420 ரூபாய்; டீசல், 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதை, இந்திய ரூபாயில் மதிப்பிட்டால், ஒரு லிட்டர் பெட்ரோல், 90 ரூபாயாகவும்; டீசல், 85 ரூபாயாகவும் இருக்கும்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
canchi ravi - Hyderabad,இந்தியா
27-மே-202216:01:21 IST Report Abuse
canchi ravi ஆப்கானிஸ்தான் நம்மிடமிருந்து உணவுப் பொருள் பெற்று நன்றிகெட்டதனமாக நடந்துகொண்டிருக்கிறது. மற்ற நாடுகளுக்கு வாரி வழங்கி நாம் திவால் ஆகக்கூடாது
Rate this:
Cancel
25-மே-202210:30:44 IST Report Abuse
ஆரூர் ரங் இந்த நெருக்கடி காரணமாகவாவது மக்களுக்கு அறிவு வந்து பெட்ரோல் போன்ற இறக்குமதி பொருட்களை சிக்கனமாகப் பயன்படுத்தத் துவங்கவேண்டும். கூடுதலாக 🙄 இறக்குமதி பொருட்கள் பயன்படுத்துவதுதான் நம் ரூபாய் மதிப்பு இறங்குவதற்கும் காரணம்
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
25-மே-202207:07:18 IST Report Abuse
Easwar Kamal சிங்களனுங்க எல்லாம் கேப்பானுங்க, கேட்ட உடனே தூக்கி கொடுக்காம கேக்கிறதை கேட்டு வாங்குங்க. கச்சத்தீவு, துறைமுகங்கள் எது நமக்கு சாதகமோ அதை கேட்டு வாங்கி கொள்ளுங்கள். நீங்களும் காங்கிரஸ்கரனுங்க மாதிரி நமக்கு என்ன வந்தது சீனாகரண் ப்ரிச்சனை பண்ணின தமிழகாதோடு போகும் என்று எண்ணாமல் அது இந்தியாவை தாக்கும் என்று எண்ணுங்கள். தந்திரத்தோடு அனுங்குங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X