குழந்தைகள் சிறப்பு மருத்துவ முகாம் துவக்கம் : மாவட்டத்தில் 21,448 குழந்தைகள் கண்காணிப்பு

Added : மே 25, 2022 | |
Advertisement
விருதுநகர், :விருதுநகர் செங்குன்றாபுரம் அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் 'நலமான குழந்தைகள் வளமான தமிழகம்” என்ற திட்டத்தை கலெக்டர் மேகநாதரெட்டி துவங்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 21,448 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களுக்கான மருத்துவ, ஊட்டச்சத்து ஆலோசனை முகாம்

விருதுநகர், :விருதுநகர் செங்குன்றாபுரம் அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் 'நலமான குழந்தைகள் வளமான தமிழகம்” என்ற திட்டத்தை கலெக்டர் மேகநாதரெட்டி துவங்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 21,448 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களுக்கான மருத்துவ, ஊட்டச்சத்து ஆலோசனை முகாம் சுகாதாரத் துறை மருத்துவர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு TN-ICDS என்கிற செயலியில் பதிவு செய்யப்படுகிறது.குழந்தைகளின் எடை, உயரம், ஊட்டச்சத்து நிலை மற்றும் சுகாதார விவரங்கள் குறிப்பிடப்பட்ட வளர்ச்சி கண்காணிப்பு அட்டை குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டு குழந்தைகளின் ஊட்டச்சத்து முன்னேற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளது.இந்த 21,448 குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் மேற்கொண்டு வட்டாரங்கள், அங்கன்வாடி மையங்கள் வாயிலாக செயல் திட்டம் வடிவமைக்கப்பட்டு மூன்று வாரங்களுக்குள் அனைத்து குழந்தைகளையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும், விடுபட்ட குழந்தைகளுக்கு 4-வது வாரத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், துணை இயக்குநர் யசோதா மணி பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X