சிவகங்கை : பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு விரும்பிய மையம் செல்ல கல்வித்துறை சலுகை அளித்துள்ளது.மே 5 முதல் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வுகள் தொடங்கின. விடைத்தாட்கள் போலீஸ் பாதுகாப்புடன் திருத்தும் மையங்களில் வைத்துள்ளனர். ஜூன் 1 முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது.
விடைத்தாளை ஆசிரியர்கள் மனஉளைச்சலின்றி திருத்த ஏதுவாக பல சலுகைகளை தேர்வுத்துறை வழங்கியுள்ளது. ஆசிரியர்கள் அவர் குடியிருக்கும் இடத்திற்கு அருகே உள்ள கல்வி மாவட்ட விடைத்தாள் திருத்தும் மையத்தில் பணி புரியலாம் என தெரிவித்துள்ளது.தமிழ்நாடு உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொது செயலாளர் சேதுசெல்வம் கூறியதாவது: பல்வேறு மாவட்டங்களில் 2017 ம் ஆண்டில் இருந்து கடைபிடித்து வரும் நடைமுறை குறித்து குழப்பமான அறிவிப்புகளை ஆசிரியர்களுக்கு வழங்கினர்.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குனருக்கு சங்கம் மூலம் கோரிக்கை வைத்தோம். அவர் பழைய முறைப்படி ஆசிரியர்கள் அவரவர் குடியிருப்புக்கு அருகில் உள்ள கல்வி மாவட்ட விடைத்தாள் திருத்தும் மையங்களில் திருத்தும் பணியில் ஈடுபடலாம் என தெரிவித்துவிட்டார், என்றார்.