பள்ளி தாளாளர் விசுவநாதன் கூறியதாவது;
கடந்த 2019 -20 கல்வியாண்டில் மாற்றிய அமைக்கப்பட்ட தமிழக அரசின் மெட்ரிக் பாடத் திட்டம், சி.பி.எஸ்.இ.,யை விட சிறப்பாக அமைந்துள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் அடிப்படை இலக்கணம் (Basic Grammar) முதல் கற்பிக்கப்படுகிறது.40 ஆண்டுகள் கல்விப்பணியில் அனுபவமிக்க தாளாளர் நேரடியாக வகுப்புகளை எடுப்பது சிறப்பு.
அறிவியல், சமூக அறிவியலில் ஒவ்வொரு பாடத் திலும் 150 கேள்வி பதில்கள் வரை Print செய்யப்பட்டு, ஒவ்வொரு மாணவருக்கும் தரப்படுகிறது. இது, பிற்காலங்களில் IAS, IPS, IFS போன்ற தேர்வுகளுக்கும், TNPSC மற்றும் UPSC தேர்வுகளுக்கும் பயனுள்ள வகையில், தொலைநோக்கு பார்வையில் கொண்டு செல்வது, எங்களது ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியின் தனிச்சிறப்பு.
உயர் வகுப்புகளில் கணிதத்தில் கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால், 100 சதவீதம் பெறுவது உறுதியாகிறது.அறிவியல் பாடத் தில் 4ம் வகுப்பு முதலே கூடுதல் கேள்வி பதில்கள் அச்சடித்து தருவதால், மாண வர்கள் NEET தேர்வில் மிகச்சிறந்த இடத்தை பெறுவதில் சந்தேகமும் இல்லை.ஹிந்தி விருப்ப மொழியாக கற்பிக்கப்படுகிறது.
ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி, உளவியல் ரீதியாக பண்படுத்தப்படுகிறார்கள். ஆசிரியைகள் மிக ஈடுபாட்டுடன் கல்விச்சேவை செய்வது, எமது பள்ளியின் வெற்றிக்கு முதன்மையானது. இப்பள்ளி மாணவர்கள், இறைவன் அருளால் மாநில அளவில் தனி முத்திரை பதிக்க உள்ளனர்' என்றார்.