சீமான் மன்னிப்பு கேட்கணும் காங்., ஜோதிமணி கொதிப்பு!| Dinamalar

சீமான் மன்னிப்பு கேட்கணும் காங்., ஜோதிமணி கொதிப்பு!

Added : மே 25, 2022 | |
கரூர் : ''கரூர் தொகுதி மக்களிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி கூறினார்.கரூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:முன்னாள் பிரதமர் ராஜிவ் குறித்து, நாம் தமிழர் என்ற கட்சியின் தலைவர் சீமான் பேசியதற்கு, நான் பதில் சொல்லி இருந்தேன். அதற்கு, நேர்மையாக பதில் சொல்ல முடியாத அவர், என்னை தனிப்பட்ட முறையில் ஆபாசமாக, வக்கிரமாக
சீமான் மன்னிப்பு கேட்கணும்   காங்., ஜோதிமணி கொதிப்பு!


கரூர் : ''கரூர் தொகுதி மக்களிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி கூறினார்.கரூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:முன்னாள் பிரதமர் ராஜிவ் குறித்து, நாம் தமிழர் என்ற கட்சியின் தலைவர் சீமான் பேசியதற்கு, நான் பதில் சொல்லி இருந்தேன். அதற்கு, நேர்மையாக பதில் சொல்ல முடியாத அவர், என்னை தனிப்பட்ட முறையில் ஆபாசமாக, வக்கிரமாக விமர்சித்துள்ளார்.

சீமான் மீது நான் கூறிய பாலியல் குற்றச்சாட்டு, நடிகை விஜயலட்சுமி கூறியது தான். அதில், உண்மை இல்லை என்றால், விஜயலட்சுமி மீது நீதிமன்றத்தில் சீமான் ஏன் வழக்கு போடவில்லை?அரசியலுக்கு வரும் பெண்களை, ஆபாசமாக பேசினால், அவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கி விடுவர் என, சீமான் போன்றவர்கள் நினைக்கின்றனர்.

பா.ஜ., வின், 'பி டீம்' தான் சீமான். என்னை பற்றி தவறாக பேசியதற்கு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X