விலை இல்லாததால் பாதுகாக்கப்படும் வெங்காயம்

Added : மே 25, 2022 | |
Advertisement
ஆண்டிபட்டி, :அறுவடை செய்த வெங்காயத்திற்கு போதிய விலை இல்லாததால் இருப்பில் வைத்து விதைப்புக்கு பயன்படுத்த விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.ஆண்டிபட்டி பகுதியில் ஏத்தகோயில், சித்தயகவுண்டன்பட்டி, அனுப்பபட்டி, ராஜதானி உட்பட பல கிராமங்களில் வெங்காய சாகுபடியாகிறது. சில மாதத்திற்கு முன் தேவை அதிகரிப்பால் கிலோ ரூ.80 முதல் ரூ.100வரை இருந்தது. கடும் தட்டுப்பாடு விவசாயிகள்
விலை இல்லாததால் பாதுகாக்கப்படும் வெங்காயம்

ஆண்டிபட்டி, :அறுவடை செய்த வெங்காயத்திற்கு போதிய விலை இல்லாததால் இருப்பில் வைத்து விதைப்புக்கு பயன்படுத்த விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.ஆண்டிபட்டி பகுதியில் ஏத்தகோயில், சித்தயகவுண்டன்பட்டி, அனுப்பபட்டி, ராஜதானி உட்பட பல கிராமங்களில் வெங்காய சாகுபடியாகிறது. சில மாதத்திற்கு முன் தேவை அதிகரிப்பால் கிலோ ரூ.80 முதல் ரூ.100வரை இருந்தது. கடும் தட்டுப்பாடு விவசாயிகள் பலரும் விதை வெங்காயம் கூடுதல் விலைக்கு வாங்கி நடவு செய்தனர். அறுவடை நேரத்தில் திடீரென்று விலை குறைந்தும், வெளிமாநில வரத்தால் விலை சரிந்தது. விவசாயிகள் கூறியதாவது: சில மாதத்திற்கு முன் விதை வெங்காயம் கிலோ ரூ.60க்கு வாங்கி நடவு செய்தோம். தற்போது அறுவடை செய்ததை கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை கொள்முதல் செய்கின்றனர். மார்கெட்டில் வியாபாரிகள் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கின்றனர். கட்டுபடியான விலை இன்றி அறுவடை செய்த வெங்காயத்தை சில வாரங்கள் இருப்பு வைத்து மீண்டும் நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம். விதை வெங்காயம் 45 நாட்கள் வரை இருப்பில் வைத்து பாதுகாக்க முடியும், என்றனர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X