வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : 'விசா நடைமுறையில்,சீனாவை சேர்ந்த ஒருவருக்கு கூட நான் உதவவில்லை' என, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: 'விசா' விவகாரத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, வேறு எந்தவொரு வகையிலோ, எனக்கு தொடர்பில்லை. சி.பி.ஐ., என் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு அபத்தமானது. முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு நிறுவனங்களுடனும் எனக்கு தொடர்பில்லை.
விசா நடைமுறையில், சீனாவை சேர்ந்த ஒருவருக்கு கூட நான் உதவவில்லை. நாட்டில் திட்டங்கள் சார்ந்த பணிகளுக்கு, விசா வழங்குவதற்கான நடைமுறைகள் குறித்து, எனக்கு எதுவும் தெரியாது. மேலும், விசா வழங்கக்கூடிய அதிகாரி எவரும் எனக்கு தெரியாது.
கடந்த ஏழு ஆண்டுகளில், எவ்வித ஆதாரமும் இல்லாமல், ஆறு முறை சோதனைகளுக்கு உள்ளாகி உள்ளேன். மத்திய அரசின் அமைப்புகள், ஒரு கட்சியின் அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படும் வகையில் மாறியுள்ளது வருத்தத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE