சீனர்களுக்கு உதவவில்லை: கார்த்தி சிதம்பரம் தகவல்| Dinamalar

சீனர்களுக்கு உதவவில்லை: கார்த்தி சிதம்பரம் தகவல்

Added : மே 25, 2022 | கருத்துகள் (12) | |
சென்னை : 'விசா நடைமுறையில்,சீனாவை சேர்ந்த ஒருவருக்கு கூட நான் உதவவில்லை' என, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: 'விசா' விவகாரத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, வேறு எந்தவொரு வகையிலோ, எனக்கு தொடர்பில்லை. சி.பி.ஐ., என் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு அபத்தமானது. முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு நிறுவனங்களுடனும் எனக்கு
Congress, Karti Chidambaram, CBI case

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : 'விசா நடைமுறையில்,சீனாவை சேர்ந்த ஒருவருக்கு கூட நான் உதவவில்லை' என, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: 'விசா' விவகாரத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, வேறு எந்தவொரு வகையிலோ, எனக்கு தொடர்பில்லை. சி.பி.ஐ., என் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு அபத்தமானது. முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு நிறுவனங்களுடனும் எனக்கு தொடர்பில்லை.


latest tamil news



விசா நடைமுறையில், சீனாவை சேர்ந்த ஒருவருக்கு கூட நான் உதவவில்லை. நாட்டில் திட்டங்கள் சார்ந்த பணிகளுக்கு, விசா வழங்குவதற்கான நடைமுறைகள் குறித்து, எனக்கு எதுவும் தெரியாது. மேலும், விசா வழங்கக்கூடிய அதிகாரி எவரும் எனக்கு தெரியாது.

கடந்த ஏழு ஆண்டுகளில், எவ்வித ஆதாரமும் இல்லாமல், ஆறு முறை சோதனைகளுக்கு உள்ளாகி உள்ளேன். மத்திய அரசின் அமைப்புகள், ஒரு கட்சியின் அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படும் வகையில் மாறியுள்ளது வருத்தத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X