நுண்ணீர் பாசன திட்டம் மத்திய அரசு பாராட்டு

Added : மே 25, 2022 | |
Advertisement
சென்னை, : தமிழகத்தில், 17.30 லட்சம் ஏக்கரில் நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதை, மத்திய வேளாண் துறை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.நாடு முழுதும் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு, மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழகத்தில், சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாகவும், மற்ற விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியத்திலும் நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் அமைத்து


சென்னை, : தமிழகத்தில், 17.30 லட்சம் ஏக்கரில் நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதை, மத்திய வேளாண் துறை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.நாடு முழுதும் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு, மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழகத்தில், சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாகவும், மற்ற விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியத்திலும் நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் அமைத்து தரப்படுகின்றன.

இதன் காரணமாக, தமிழக விவசாயிகளிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை, 17.30 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் அமைத்து தரப்பட்டுள்ளன. இதனால், பாசனத்திற்கான நீர் தேவை குறைந்துள்ளது. சமீபத்தில், நுண்ணீர் பாசனம் திட்ட இலக்கு தொடர்பான ஆலோசனை கூட்டம், டில்லியில் நடந்தது. இதில், தமிழக வேளாண்மை துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதையும், இதற்கான 'ஆன்லைன்' முன்பதிவு சிறப்பாக நடப்பதையும், மத்திய வேளாண் துறை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். தமிழகத்தில் நடப்பாண்டில், 2.50 லட்சம் ஏக்கரில் இத்திட்டத்தை செயல்படுத்த, நிதி வழங்குவதற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X