அனைத்து இன்ஜி., படிப்புகளுக்கும் பிரகாசமான எதிர்காலம் உண்டு| Dinamalar

அனைத்து இன்ஜி., படிப்புகளுக்கும் பிரகாசமான எதிர்காலம் உண்டு

Added : மே 25, 2022 | |
''எல்லா வகை இன்ஜினியரிங் தொழில்நுட்ப படிப்புக்கும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது; டேட்டா சயின்சையும் கூடுதலாக ஐ.ஐ.டி.,யில் படியுங்கள்,'' என, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி கூறினார்.உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பேசியதாவது:எல்லா வகை இன்ஜினியரிங் தொழில்நுட்பத்துக்கும் எதிர்காலம் உள்ளது. அதனால் எதையும் படிக்கலாம்.தற்போது நாம்


''எல்லா வகை இன்ஜினியரிங் தொழில்நுட்ப படிப்புக்கும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது; டேட்டா சயின்சையும் கூடுதலாக ஐ.ஐ.டி.,யில் படியுங்கள்,'' என, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி கூறினார்.

உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பேசியதாவது:எல்லா வகை இன்ஜினியரிங் தொழில்நுட்பத்துக்கும் எதிர்காலம் உள்ளது. அதனால் எதையும் படிக்கலாம்.தற்போது நாம் பயன்படுத்தும் மொபைல் போனில், '4 ஜி' உள்ளது. '5 ஜி' வரப்போகிறது;

இவை அனைத்தும் பூமியில் நம்மை தகவல் தொழில்நுட்பத்தில் இணைக்க கூடியது.அடுத்து வரப்போகும் '6 ஜி' பூமியையும், விண்வெளியில் உள்ள செயற்கை கோள்களையும் இணைக்கும் தொழில்நுட்பத்துடன் வரப்போகிறது. எதிர்காலத்தில், லட்சக்கணக்கான செயற்கைக்கோள்களை ஏவ வேண்டிய தேவை உள்ளது. இதற்கு, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் ஸ்ட்ரக்சுரல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., மெட்டலர்ஜி, எலக்ட்ரானிக்ஸ், நேவல் ஆர்கிடெக்சர், டிசைனிங், நேனோ டெக்னாலஜி என, எல்லா வகை தொழில்நுட்பம் படித்த வல்லுனர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன.வருங்காலத்தில் இன்னொரு முக்கிய வளர்ச்சியாக, டேட்டா சயின்ஸ் இருக்க போகிறது. அனைத்து வகை தொழில் நிறுவனங்களிலும், டேட்டாக்கள் அடிப்படையிலேயே ஏராளமான பணிகள் நடக்கின்றன. இன்றைய நிலையில், ஒரு குறிப்பிட்ட குடியிருப்பு பகுதியில் எந்த நாளில், எந்த வகை காய்கறிகள் வாங்குகின்றனர் என்ற டேட்டாவைக் கூட, காய்கறி விற்கும் ஆன்லைன் செயலி வழியே எடுக்க முடியும்.இப்படி எல்லா வகை துறைகளிலும் டேட்டாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எனவே, டேட்டா சயின்ஸ் படிப்பின் தேவையை உணர்ந்து, சென்னை ஐ.ஐ.டி.,யில், பி.எஸ்சி., டேட்டா சயின்ஸ் படிப்பு ஆன்லைன் வழியில் நடத்தப்படுகிறது.இதில், ஜே.இ.இ., தேர்வு எழுதாமல், மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம். நீங்கள் எந்த படிப்பை படித்து கொண்டிருந்தாலும், பிளஸ் 2 முடித்த எல்லா வயதினரும், இரண்டாம் பட்டப்படிப்பாக, டேட்டா சயின்ஸ் படிக்கலாம்.இதற்கான எல்லா வகை கட்டண சலுகைகளையும் ஐ.ஐ.டி., வழங்குகிறது. கூடுதலான இந்த படிப்பு வேலைவாய்ப்புக்கு முழுமையாக தகுதி பெற்றது.இவ்வாறு அவர் பேசினார்.

இணைந்த கல்வி கரங்கள்!

'தினமலர்' நாளிதழுடன், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து, இந்த ஆண்டுக்கான 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. முக்கிய பங்களிப்பாளராக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. வேல்ஸ் நிகர்நிலை பல்கலை, டாட் ஸ்கூல் ஆப் டிசைன், பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் நிகர்நிலை பல்கலை, சென்னை ஷிவ் நாடார் பல்கலை, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து, வழிகாட்டி நிகழ்ச்சியை வழங்குகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X