கஞ்சி காய்ச்சும் போராட்டம் கூலி தொழிலாளர்கள் கைது

Added : மே 25, 2022 | |
Advertisement
மதுராந்தகம்:மதுராந்தகம் நகரில் உள்ள சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கும், கடை வியாபாரிகளுக்கும் இடையே, கூலி உயர்வு சம்பந்தமாக பிரச்னை உள்ளது.இதனால், தங்களுக்கு சாதகமான ஆட்களை வைத்து, வியாபாரிகள் மூட்டைகளை இறக்கியும், ஏற்றியும் வருகின்றனர்.வியாபாரிகளின் இந்நடவடிக்கையால் 200க்கும் மேற்பட்ட சுமை துாக்கும் கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக,

மதுராந்தகம்:மதுராந்தகம் நகரில் உள்ள சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கும், கடை வியாபாரிகளுக்கும் இடையே, கூலி உயர்வு சம்பந்தமாக பிரச்னை உள்ளது.இதனால், தங்களுக்கு சாதகமான ஆட்களை வைத்து, வியாபாரிகள் மூட்டைகளை இறக்கியும், ஏற்றியும் வருகின்றனர்.
வியாபாரிகளின் இந்நடவடிக்கையால் 200க்கும் மேற்பட்ட சுமை துாக்கும் கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, அத்தொழிலாளர்கள் கூறி வருகின்றனர்.தமிழக அரசு தலையிட்டு, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இரு தரப்பினரிடம் பேச்சு நடத்தி உடன்பாடு ஏற்படுத்த வேண்டும் எனவும், அவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இதே கோரிக்கைளை நிறைவேற்ற கோரி, மதுராந்தகம் நகரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன், கஞ்சி காய்ச்சும் போராட்டத்தை நேற்று நடத்தினர்.சுமை துாக்கும் பணியாளர்களுக்கு, வேலை தர மறுக்கும் மதுராந்தகம் நகர வியாபாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.தகவலறிந்து வந்த மதுராந்தகம் போலீசார், அவர்களை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து, மாலையில் விடுவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X