போலீஸ் செய்திகள்

Added : மே 25, 2022 | |
Advertisement
குண்டர் சட்டத்தில் கைதுமதுரை: திருப்பரங்குன்றம் கோட்டை தெரு ராம்குமார் 22. வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.மாணவருக்கு தொந்தரவுமதுரை: செல்லுார் மீனாம்பாள்புரம் ரஞ்சித்குமார் 20. இவர் அப்பகுதி 12 வயது மாணவருக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டார்.பெண் ஏட்டு



குண்டர் சட்டத்தில் கைது

மதுரை: திருப்பரங்குன்றம் கோட்டை தெரு ராம்குமார் 22. வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.மாணவருக்கு தொந்தரவுமதுரை: செல்லுார் மீனாம்பாள்புரம் ரஞ்சித்குமார் 20. இவர் அப்பகுதி 12 வயது மாணவருக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டார்.பெண் ஏட்டு மகன் தற்கொலை மதுரை: ஊமச்சிக்குளம் போலீஸ் ஏட்டு ரஜினிமாலா. இவரது மூத்த மகன் ரகுநாத் 21. இவர் வெளிமாநில நிகர்நிலை பல்கலையில் 3ம் ஆண்டு பி.டெக் படித்தார். ஆறுமாதங்களாக ஆன்லைனில் படித்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தந்தை வேலுச்சாமி அசாமில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரராக உள்ளார். தற்கொலை காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.நகை மாயம் மேலுார்: சிவகங்கை வளர்மதி 60. மேலுார் பஸ் ஸ்டாண்டில் பையில் வைத்திருந்த 5 பவுன் நகை மாயமானது. உண்மையா என போலீசார் விசாரிக்கின்றனர்.போக்சோவில் கைது கள்ளிக்குடி: சித்துார் தங்கமாரி 23. இவர் 16 வயது சிறுமியை கடந்த செப்.,9ல் திருமணம் செய்தார். தற்போது சிறுமி கர்ப்பிணியாக உள்ளார். சமூகநல அலுவலர் செல்வி புகாரில் போக்சோவில் தங்கமாரியை போலீசார் கைது செய்தனர். கார் கவிழ்ந்து பெண் பலிகணவர், மகன் படுகாயம் மதுரை: தாசில்தார் நகர் நாகராஜ் 42. கணினி நிறுவன ஊழியர். நேற்று காலை ஈரோட்டில் உள்ள மாமனார் வீட்டிற்கு மனைவி சங்கரவடிவு 36, மகன் சாய்சங்கருடன் காரில் சென்றார். அவரே ஓட்டினார். வேடசந்துார் நான்குவழிச்சாலை கல்வார்பட்டி அருகே ரோட்டோர தடுப்புக்கல்லில் கார் மோதி கவிழ்ந்தது. இதில் சங்கரவடிவு இறந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெறுகின்றனர்.----- மின்னல் தாக்கி சிறுவன் பலி மேலுார்: அழகர்கோவில் அம்மாசி 36, சுனிதா 30, தம்பதி மகன் அர்ஜுன்6, நேற்று மாலை பெற்றோருடன் வீடு அருகே கட்டப்பட்ட மாட்டை அவிழ்க்க சென்றார். திடீரென மின்னல் தாக்கியதில் அர்ஜூன் இறந்தார். பெற்றோர் காயங்களுடன் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X