சாக்கடை துார்வாராததால் சுகாதாரம் போயே போச்சு!

Added : மே 25, 2022 | |
Advertisement
தெருவிளக்கு அமைக்கணும்!ஆனைமலை, பெத்தநாயக்கனுார் அருகே தெருவிளக்குகள் இல்லாததால், மக்கள் இரவு நேரங்களில் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ஊராட்சியினர் விரைவில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.- மாரிமுத்து, பெத்தநாயக்கனுார்.நடைபாதை சேதம்வால்பாறை நகராட்சி அலுவலகம் முன் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை, இடிந்த நிலையில் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் மக்கள் தடுமாறி

தெருவிளக்கு அமைக்கணும்!

ஆனைமலை, பெத்தநாயக்கனுார் அருகே தெருவிளக்குகள் இல்லாததால், மக்கள் இரவு நேரங்களில் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ஊராட்சியினர் விரைவில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.- மாரிமுத்து, பெத்தநாயக்கனுார்.

நடைபாதை சேதம்
வால்பாறை நகராட்சி அலுவலகம் முன் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை, இடிந்த நிலையில் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் மக்கள் தடுமாறி விழுகின்றனர். நகராட்சியினர் விரைவில் சீரமைக்க வேண்டும்.- சுபா, வால்பாறை.

நிழற்கூரை வேண்டும்
பொள்ளாச்சி - கோவை ரோடு ஆச்சிபட்டியில், பயணிகள் நிழற்கூரை அமைக்கப்படாமல் உள்ளதால், மக்கள் வெயில், மழையில் பஸ்சுக்காக காத்திருக்கும் அவலநிலை நீடிக்கிறது. விரைவில் நிழற்கூரை அமைக்க வேண்டும்.- செந்தில், ஆச்சிபட்டி.

'பிளக்ஸ்' ஆதிக்கம்
பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுப்பகுதியில் பிளக்ஸ் பேனர் வைக்க தடை உள்ள போதும், அதுபற்றி கவலையின்றி, பல தரப்பினரும் பிளக்ஸ் பேனர் அமைக்கின்றனர். அதற்கான தளவாடங்களை, சரக்கு ஆட்டோக்களில் பாதுகாப்பின்றி எடுத்துச் செல்கின்றனர்.- பாலாஜி அரவிந்த், பொள்ளாச்சி.

குப்பை குவிப்பு
ஆனைமலை ஒன்றியம், தென்சங்கம்பாளையத்தில் ரோட்டோரம் குப்பை குவித்து, பல மீட்டர் பரப்புக்கு குப்பைக் கிடங்கு போல காட்சியளிக்கிறது. மழைக்கு குப்பையில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும்.- சந்தியா, தென்சங்கம்பாளையம்.

கடும் துர்நாற்றம்
பொள்ளாச்சி, பாலகோபாலபுரம் வீதியில், சாக்கடை கால்வாய்கள் முறையாக துார்வாரப்படாமல் உள்ளதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி துாய்மை பணியாளர்கள், சாக்கடை கால்வாய்களை துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும்.- லலிதா, பொள்ளாச்சி.

வனவிலங்குகளால் அச்சம்
வால்பாறை, வாட்டர்பால்ஸ் இரண்டாவது டிவிஷனில், தெருவிளக்குகள் பற்றாக்குறையாக உள்ளது. இரவு நேரங்களில் கரடிகள் வருவதால், மக்கள் அச்சத்துடனே நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- உதயகுமார், வாட்டர்பால்ஸ்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X