கஞ்சா வியாபாரியின் ரூ.22.50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்; தேனி எஸ்.பி., பிரவீன் தகவல்| Dinamalar

கஞ்சா வியாபாரியின் ரூ.22.50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்; தேனி எஸ்.பி., பிரவீன் தகவல்

Added : மே 25, 2022 | |
தேனி, : மயிலாடும்பாறை கஞ்சா வியாபாரி முருகன், அவரது உறவினர்களின் ரூ.22.50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன,'' என, தேனியில் எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்க்ரே தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மயிலாடும்பாறையை சேர்ந்த கீரிப்பட்டி முருகன் 52, கோம்பைத்தொழு ரோடு காமன் கல்லுாரில் 220 கிலோ கஞ்சாவை 2017ல் பதுக்கியிருந்தார். மதுரை சிறப்பு நீதிமன்றம் 2019 ல் அவருக்கு 10 ஆண்டுகள்

தேனி, : மயிலாடும்பாறை கஞ்சா வியாபாரி முருகன், அவரது உறவினர்களின் ரூ.22.50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன,'' என, தேனியில் எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்க்ரே தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மயிலாடும்பாறையை சேர்ந்த கீரிப்பட்டி முருகன் 52, கோம்பைத்தொழு ரோடு காமன் கல்லுாரில் 220 கிலோ கஞ்சாவை 2017ல் பதுக்கியிருந்தார்.

மதுரை சிறப்பு நீதிமன்றம் 2019 ல் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்தது. அவர் சிறையில் உள்ளார்.இந்நிலையில் கஞ்சா ஒழிப்பிற்காக ஏ.டி.எஸ்.பி., சக்திவேல், டி.எஸ்.பி., ராமலிங்கம் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இக்குழுவினர் முருகனின் மைத்துனர் குமணன் தொழுவில் உள்ள நாகராஜனின் ரூ.12 லட்சம் மதிப்புள்ள வீடு, காலியிடம், தங்கை இந்திராணியின் ரூ.10 லட்சம் மதிப்புள்ள காலிமனை, ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள டூவீலர் உள்ளிட்ட ரூ.22.50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்க சென்னையில் இயங்கும் கடத்தல்காரர்களின் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கான அதிகார முகமைக்கு பரிந்துரைத்தோம்.

மே 24ல் சொத்துக்களை அந்த அமைப்பு முடக்கியது. இச்சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும். இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் பதுக்கல் முற்றிலும் குறைக்கப்படும் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X