மாவட்டத்தில் ஜமாபந்தி துவங்கியது:24 வகையான வருவாய் பதிவேடு தணிக்கை

Added : மே 25, 2022 | |
Advertisement
திருப்பூர்:மாட்டத்தில் உள்ள, ஒன்பது தாலுகாக்களிலும், நேற்று ஜமாபந்தி துவங்கியது; 24 வகையான வருவாய்த்துறை பதிவேடுகள் தணிக்கை செய்து, ஒப்புதல் அளிக்கப்பட்டது.ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில், கலெக்டர் வினீத் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. வருவாய் கிராமங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில், 24 வகையான பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன.வருவாய் கணக்கு விவரம் அடங்கிய
மாவட்டத்தில் ஜமாபந்தி துவங்கியது:24 வகையான வருவாய் பதிவேடு தணிக்கை

திருப்பூர்:மாட்டத்தில் உள்ள, ஒன்பது தாலுகாக்களிலும், நேற்று ஜமாபந்தி துவங்கியது; 24 வகையான வருவாய்த்துறை பதிவேடுகள் தணிக்கை செய்து, ஒப்புதல் அளிக்கப்பட்டது.ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில், கலெக்டர் வினீத் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. வருவாய் கிராமங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில், 24 வகையான பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன.
வருவாய் கணக்கு விவரம் அடங்கிய பதிவேடுகளில், கடந்த, 2021-22ம் நிதியாண்டில் நடந்த பரிவர்த்தனைகள் தணிக்கை செய்யப்பட்டு, ஜமாபந்தி அலுவலரால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.ஒவ்வொரு தாலுகாவிலும், பட்டா பெயர் மாறுதல், பட்டா உட்பிரிவு, சிட்டா - அடங்கல் நகல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம் என, பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் மனு கொடுத்தனர். ஜமாபந்தி அலுவலர், மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, மேல் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளனர். திருப்பூர் தெற்கு தாலுகாவில், திருப்பூர் தெற்கு பிர்காவுக்கு உட்பட்ட, மங்கலம், இடுவாய், ஆண்டிபாளையம், வீரபாண்டி, திருப்பூர் டவுன் கிராமங்களுக்கு நேற்று ஜாமபந்தி நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், ஜமாபந்தி அலுவலராக இருந்து, வருவாய் தீர்வாயத்தில் ஒப்புதல் வழங்கினார்; பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், தாசில்தார் கோவிந்தராஜன், துணை தாசில்தார் அருள்குமார், தலைமை சர்வேயர் சகாயராஜ், தலைமையிடத்து தனி துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி, நில வருவாய் ஆய்வாளர் கலையரசன் பங்கேற்றனர். திருப்பூர் வடக்கு தாலுகாவில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வாசுகி தலைமையில் ஜமாபந்தி துவங்கியது. தாசில்தார் கனகராஜ் வரவேற்றார்.மண்டல துணை தாசில்தார் செந்தில், தலைமையிடத்து தனி துணை தாசில்தார் கவுரி, தலைமை சர்வேயர் பாரதி, நில வருவாய் ஆய்வாளர் சக்திவேல், தொட்டிபாளையம், மண்ணரை, செட்டிபாளையம் வி.ஏ.ஓ.,கள் பங்கேற்றனர். மூன்று வருவாய் கிராமங்களுக்கு, ஜமாபந்தி நடந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X