நாளை சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி| Dinamalar

நாளை சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Added : மே 25, 2022 | |
சென்னை : நாளை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, 2,900 கோடி ரூபாய் மதிப்பிலான, ஐந்து திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன், 28 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள, ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி, நாளை சென்னை வருகிறார். ஹைதராபாதில் இருந்து, நாளை மாலை 5:45 மணிக்கு விமானத்தில் சென்னை வருகிறார். சென்னை


சென்னை : நாளை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, 2,900 கோடி ரூபாய் மதிப்பிலான, ஐந்து திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன், 28 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள, ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி, நாளை சென்னை வருகிறார்.

ஹைதராபாதில் இருந்து, நாளை மாலை 5:45 மணிக்கு விமானத்தில் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து, ராணுவ ஹெலிகாப்டரில், ஐ.என்.எஸ்., அடையாறு செல்கிறார். அங்கிருந்து காரில் விழா நடக்கும், நேரு உள் விளையாட்டுஅரங்கம் செல்கிறார். வழி நெடுகிலும் பா.ஜ.,வினர் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

இயற்கை எரிவாயு

விழாவில், மதுரை - தேனி அகல ரயில் பாதை; தாம்பரம் - செங்கல்பட்டு மூன்றாவது ரயில் பாதை; எண்ணுார் - செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் - பெங்களூரு இடையே குழாய் வழியே இயற்கை எரிவாயு எடுத்து செல்லும் திட்டம் ஆகியவற்றை, பிரதமர் துவக்கி வைக்கிறார்.அத்துடன், சென்னை, பெரும்பாக்கத்தில் 116 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, 1,152 வீடுகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பை திறந்து வைக்க உள்ளார். சென்னை - பெங்களூரு விரைவு சாலை, சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான,

இரண்டு அடுக்கு உயர்மட்ட பாலம்; ஓசூர் - தர்மபுரி; மீன்சுருட்டி - சிதம்பரம் நெடுஞ்சாலைப் பணிகள் ஆகியவற்றுக்கு, பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டம்; திருவள்ளூர் மாவட்டம், மப்பேடில் அமைய உள்ள பன்முனை சரக்கு பூங்கா ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.இவ்விழாவில், கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய - மாநில அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.கோரிக்கை மனுபிரதமரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின், 'நீட்' தேர்வு ரத்து உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரதமரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X