மாணவர்கள் உற்சாகம் பெற்றோர் நம்பிக்கை| Dinamalar

மாணவர்கள் உற்சாகம் பெற்றோர் நம்பிக்கை

Added : மே 25, 2022 | |
'கட் ஆப்' பற்றி புரிந்து கொண்டேன்!உயர் கல்விக்கான ஆலோசனைகள் பெறுவதற்கு, 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றேன். என் எதிர்காலத்துக்கான ஆலோசனைகள் மட்டுமின்றி, தினமலர் நடத்திய போட்டியில், 'லேப்டாப்' பரிசும் கிடைத்து, இரட்டை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முயற்சித்தால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, இங்கே கிடைத்துள்ளது.-- ஆதித்யா காளிதாஸ்,
மாணவர்கள் உற்சாகம்  பெற்றோர் நம்பிக்கை



'கட் ஆப்' பற்றி புரிந்து கொண்டேன்!உயர் கல்விக்கான ஆலோசனைகள் பெறுவதற்கு, 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றேன். என் எதிர்காலத்துக்கான ஆலோசனைகள் மட்டுமின்றி, தினமலர் நடத்திய போட்டியில், 'லேப்டாப்' பரிசும் கிடைத்து, இரட்டை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முயற்சித்தால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, இங்கே கிடைத்துள்ளது.-- ஆதித்யா காளிதாஸ், வில்லிவாக்கம்.வங்கி மேலாளர் ஆக வேண்டும் என்பது, என் அப்பாவின் ஆசை. '

தினமலர்' வழிகாட்டியில், எதை எப்படி படிக்க வேண்டும் என்ற தெளிவு கிடைத்துள்ளது. பேச்சாளர்களின் தகவல்கள், என்னை போன்ற மாணவர்களுக்கு பெரும் ஊக்கத்தை அளித்தது.- -டி.காவியாஸ்ரீ, புரசைவாக்கம்.நான் பிளஸ் 2 உயிரியல் பாடப்பிரிவு படித்துள்ளேன். அடுத்து, செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் அறிவியல் படிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது.

இதற்கான படிப்பு மற்றும் கல்லுாரிகளை வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வந்து தெரிந்து கொண்டேன்.-- வ.தமிழ்தாரகை,- ராயப்பேட்டை.பிளஸ் 2வுக்கு பின், என்ன படிக்க வேண்டும்; எப்படி கல்லுாரியை தேர்வு செய்வது என்ற குழப்பம் இருந்தது. அது, வழிகாட்டி நிகழ்ச்சி வழியாக தீர்ந்து விட்டது. என் தோழிகளுக்கும், இங்கு பெற்ற ஆலோசனைகளை கூற உள்ளேன்.-- சரண்யா,- திருவொற்றியூர்.கால்நடை மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

கால்நடை மருத்துவம் படிக்க, எவ்வளவு 'கட் ஆப்' என்பது குறித்து வழிகாட்டி நிகழ்ச்சியில் தெரிந்து கொண்டேன்.-- கே.ஜெகன்,- மேடவாக்கம்.என்ன படிக்கலாம்; புதிய பாடப்பிரிவுகள் என்ன; வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு செல்வது எப்படி என்பதற்கு, இந்த நிகழ்ச்சியில் பல ஆலோசனைகள் பெற்றுள்ளேன். கல்வியாளர்கள் மற்றும் துறை நிபுணர்களின் கருத்துக்கள் பயனுள்ளதாக இருந்தன.-- ஆர்.சுமந்த்,- முகப்பேர்.பாடத்திட்டத்தை மட்டும் படிக்காமல், துறை சார்ந்த புதிய விஷயங்கள் குறித்து, 'அப்டேட்' ஆக வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன்.

நிகழ் காலம் குறித்து மட்டுமின்றி, வருங்கால வளர்ச்சியையும் அறிந்து படிக்க வேண்டும் என, தெரிந்துக் கொண்டேன். வழிகாட்டி நிகழ்ச்சியில் நடத்திய போட்டியில், பரிசும் கிடைத்துள்ளது, இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது.- -ஜி.தேஜஸ்வி அதிதி,- சைதாப்பேட்டை


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X