மகனை கொன்ற தந்தை ; போதையால் விபரீதம்

Added : மே 25, 2022 | |
Advertisement
வீரபாண்டி, : போதையில் ஏற்பட்ட தகராறில், கட்டையால் தாக்கியதில் மகன் உயிரிழந்தார். தலைமறைவான தந்தையை போலீசார் தேடுகின்றனர்.சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி, ரத்தினவேல் காட்டைச் சேர்ந்த தறித்தொழிலாளி சுப்ரமணி, 67. இவரது மனைவி சில ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன் மணி, 37. இவர், தறித்தொழில், சமையல் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு திருமணம் ஆகாததால், தந்தையுடன்


வீரபாண்டி, : போதையில் ஏற்பட்ட தகராறில், கட்டையால் தாக்கியதில் மகன் உயிரிழந்தார். தலைமறைவான தந்தையை போலீசார் தேடுகின்றனர்.சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி, ரத்தினவேல் காட்டைச் சேர்ந்த தறித்தொழிலாளி சுப்ரமணி, 67. இவரது மனைவி சில ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன் மணி, 37. இவர், தறித்தொழில், சமையல் வேலைக்கு சென்று வந்தார்.

இவருக்கு திருமணம் ஆகாததால், தந்தையுடன் வசித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, தந்தை - மகன் இருவரும் வீட்டில் மது போதையில் இருந்தனர். அப்போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கையால் மகன் தாக்கியதில், தந்தை சுப்ரமணி தலையில் படுகாயம் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த அவர், கட்டையால் மகனை தாக்கினார். அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆட்டையாம்பட்டி போலீசார், தலைமறைவான சுப்ரமணியை தேடுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X