பாராக மாறி வரும் பிரம்ம தீர்த்தம்| Dinamalar

பாராக மாறி வரும் பிரம்ம தீர்த்தம்

Added : மே 25, 2022 | |
மேலுார், :மேலுார், திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயில் எதிரே உள்ள பிரம்ம தீர்த்தத்தை அறநிலையத்துறையினர் பராமரிக்காததால் வீணாகி வருகிறது.இக் கோயில் கடந்த 2,300 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. சிவபெருமான் சனிபகவானின் வாதத்தை தீர்த்த தலம் என்பதால் வாதவூர் என்ற பெயர் பெற்றது. இங்க மகாசிவராத்திரி, நவராத்திரி, வைகாசி திருக்கல்யாணம்
பாராக மாறி வரும் பிரம்ம தீர்த்தம்

மேலுார், :மேலுார், திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயில் எதிரே உள்ள பிரம்ம தீர்த்தத்தை அறநிலையத்துறையினர் பராமரிக்காததால் வீணாகி வருகிறது.இக் கோயில் கடந்த 2,300 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. சிவபெருமான் சனிபகவானின் வாதத்தை தீர்த்த தலம் என்பதால் வாதவூர் என்ற பெயர் பெற்றது. இங்க மகாசிவராத்திரி, நவராத்திரி, வைகாசி திருக்கல்யாணம் உள்பட பல திருவிழாக்கள் பிரசித்தி பெற்றவை. கோயிலில் சிவ, கபில, பிரம்ம, வாயு உள்ளிட்ட 7 வகையான தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் கோயிலுக்கு வெளியே உள்ள பிரம்ம தீர்த்தம் பராமரிப்பின்றி வீணாகி வருகிறது.பக்தர்கள் கூறியதாவது: இக்கோயிலில் சனி, பைரவருக்கு விளக்கேற்றினால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இங்கு தீர்த்தமாட முடியாமல் சிரமப்படுகின்றனர். யாரும் பராமரிக்காததால் தீர்த்தத்தை சுற்றி சுகாதார கேடு ஏற்பட்டு, முட்கள் வளர்ந்து, பாராகவும் மாறி வருகிறது.ஜூன் 2ல் திருவிழா துவங்க உள்ளதால் கோயில் நிர்வாகத்தினர் சுத்தம் செய்து தீர்த்தத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என்றார். பேஷ்கார் ஷாஜி கூறுகையில், ''பிரம்ம தீர்த்தத்தை சுற்றி கம்பி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X