மதுரை, :மதுரையில் மகாத்மா காந்தி தொழிலாளர் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு கூட்டுறவு சங்கங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி குறித்து மாநில ஆலோசனை கூட்டம் நடந்தது.இயக்குனர் கருப்பையா வரவேற்றார். சங்கத்தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன், சென்னை சக்தி லேபர் காண்ட்ராக்ட் சொசைட்டி தலைவர் பாலு முன்னிலை வகித்தனர். மாவட்ட பதிவாளர் சதாசிவம், தாட்கோ மாவட்ட மேலாளர் கோவிந்தன், திருநெல்வேலி இயக்குனர் பிரதீப், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட 13 கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய துணைத் தலைவர் கோவிந்தராஜ் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.