கருணை பணி என்பது உரிமை அல்ல: சலுகை என உயர் நீதிமன்றம் உத்தரவு

Added : மே 25, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மதுரை, : 'கருணை பணி நியமனத்தை உரிமையாக கொள்ள முடியாது; இது ஒரு சலுகை. அப்பணி நியமனம் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.திருநெல்வேலி முகமது இஸ்ஸாத் அலி என்பவர் தாக்கல் செய்த மனு:என் தந்தை சுகாதாரத்துறையில் பணிபுரிந்த போது, 1986ல் இறந்தார். நான் அப்போது, 1 வயது குழந்தை. பின் என் தாயும் இறந்தார். அவர் அரசுப் பணியில்
கருணை பணி என்பது உரிமை அல்ல: சலுகை என உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை, : 'கருணை பணி நியமனத்தை உரிமையாக கொள்ள முடியாது; இது ஒரு சலுகை. அப்பணி நியமனம் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.திருநெல்வேலி முகமது இஸ்ஸாத் அலி என்பவர் தாக்கல் செய்த மனு:என் தந்தை சுகாதாரத்துறையில் பணிபுரிந்த போது, 1986ல் இறந்தார். நான் அப்போது, 1 வயது குழந்தை. பின் என் தாயும் இறந்தார்.

அவர் அரசுப் பணியில் சேர்வதற்கான தகுதியை பெற்றிருக்கவில்லை.நான் மைனராக இருந்ததால், அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கும் நிலையில் இல்லை. உரிய வயதை அடைந்த நிலையில், கருணைப் பணி நியமனம் கோரி, தமிழக அரசின் தலைமைச் செயலர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலருக்கு விண்ணப்பித்தேன்.இறந்த அரசு ஊழியர்களின் மைனர் குழந்தைகளுக்கு கருணை பணி வழங்குவது தொடர்பான விதிகளை சேர்க்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதன் அடிப்படையில் அரசாணை வெளியிட்டு என் மனுவை பரிசீலித்து, கருணை பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு:அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து, மூன்றாண்டுகளுக்குள் கருணை பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வழக்கில் அப்போது மனுதாரர் 'மைனர்' என்பதால், விண்ணப்பிப்பதற்கான தகுதியை பெற்றிருக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு பின் தற்போது விண்ணப்பித்துள்ளார்.

கருணை பணி நியமனத்தை முழு உரிமையாக கொள்ள முடியாது. இது ஒரு சலுகை. அத்தகைய சலுகையின் விதிகள் மற்றும் நிபந்தனைகள் கண்டிப்பாக நீட்டிக்கப்பட வேண்டும்.இறந்த பணியாளரின் மரணத்தால் ஏற்படும் சூழ்நிலைகளை கருதி, பணி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.அரசு ஊழியர் மரணமடையும் போது, தகுதியை சரிபார்க்காமல் கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. பொது நிர்வாகத்தில் திறமையும் பரிசீலிக்கப்பட வேண்டும். இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veeramani Shankar - Hyderabad,இந்தியா
25-மே-202210:05:23 IST Report Abuse
Veeramani Shankar Good decision Mr Judge
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25-மே-202206:39:08 IST Report Abuse
Natarajan Ramanathan கருணை பணி நியமன முறையையே முற்றிலும் தடை செய்தால் கூட நல்லது. அப்படி சேர்ந்தவர்கள் மிகப் பெரும்பாலும் திறமையே இல்லாதவர்களாகவும் ஆனால் லஞ்சம் வாங்குவதில் மிகுந்த திறமை உள்ளவர்களாகவும் இருப்பது உண்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X