தம்பதி அடித்துக் கொலை: கந்து வட்டி கும்பல் கொடூரம்

Added : மே 25, 2022 | |
Advertisement
ராணிப்பேட்டை, : அரக்கோணம் அருகே, கணவன், மனைவியை கந்து வட்டி கும்பல் அடித்துக் கொலை செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே கைலாசபுரம் ஏரி வாய்க்கால் ஓரம், நேற்று காலை ஆண், பெண் உடல்கள் கிடந்தன. அவற்றை கைப்பற்றிய அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர்.இறந்து கிடந்தவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம், அரசன்தாங்கலைச் சேர்ந்த நெசவு தொழிலாளி


ராணிப்பேட்டை, : அரக்கோணம் அருகே, கணவன், மனைவியை கந்து வட்டி கும்பல் அடித்துக் கொலை செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே கைலாசபுரம் ஏரி வாய்க்கால் ஓரம், நேற்று காலை ஆண், பெண் உடல்கள் கிடந்தன. அவற்றை கைப்பற்றிய அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர்.இறந்து கிடந்தவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம், அரசன்தாங்கலைச் சேர்ந்த நெசவு தொழிலாளி மாணிக்கம், 51, அவர் மனைவி ராணி, 47, என்பது தெரிந்தது.போலீசார் கூறியதாவது:

மாணிக்கம் மகள் சசிகலாவுக்கு திருமணமான நிலையில், தந்தை வீட்டிலேயே தங்கி, தனியார் கல்லுாரியில் செவிலியர் இரண்டாமாண்டு படிக்கிறார்.மகன் பெருமாள் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இதனால், குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்ட மாணிக்கம், காஞ்சிபுரத்திலுள்ள ஒரு கந்து வட்டி கும்பலிடம் கடந்தாண்டு, 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.அசல், வட்டியை கட்டாததால், கந்து வட்டி கும்பலைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் மாலை மாணிக்கம், ராணியை காரில் கடத்தி வந்து, கட்டையால் அடித்துக் கொலை செய்து, கைலாசபுரம் ஏரி வாய்க்கால் ஓரம் வீசிச் சென்றுஉள்ளனர்.இவ்வாறு கூறினர்.இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X