நகைக்கடை சுவரில் துளையிட்டு ரூ.1 கோடி நகை, பணம் கொள்ளை

Added : மே 25, 2022 | |
Advertisement
வேலுார் : \ திருவலம் அருகே நகைக்கடை சுவரில் துளையிட்டு, 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.வேலுார் மாவட்டம், மேல்பாடியைச் சேர்ந்தவர் அனில்குமார், 30. திருவலம் அருகே சேர்க்காடு கூட்டுச்சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார்.இவர் கடைக்கு பக்கத்தில் குளிர்பானக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, அனில்குமார் கடையை மூடி வீட்டுக்கு


வேலுார் : \ திருவலம் அருகே நகைக்கடை சுவரில் துளையிட்டு, 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.வேலுார் மாவட்டம், மேல்பாடியைச் சேர்ந்தவர் அனில்குமார், 30. திருவலம் அருகே சேர்க்காடு கூட்டுச்சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார்.இவர் கடைக்கு பக்கத்தில் குளிர்பானக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, அனில்குமார் கடையை மூடி வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள், குளிர்பான கடையின் பின்பக்க சுவரில் துளை உள்ளதை பார்த்து, அனில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.திருவலம் போலீசார், நகைக்கடையை திறந்து பார்த்தனர். அப்போது, குளிர்பான கடையின் பின்பக்க சுவரில், மர்ம நபர்கள் துளைபோட்டு உள்ளே புகுந்து, பக்கத்திலுள்ள நகைக்கடையின் சுவரிலும் துளையிட்டு, அதன் வழியாக உள்ளே நுழைந்துள்ளனர்.

நகைக்கடை லாக்கரை உடைத்து அதிலிருந்த 90 சவரன் தங்க நகை, 100 கிலோ வெள்ளி பொருட்கள், 30 ஆயிரம் ரூபாயை ‍கொள்ளையடித்து தப்பியுள்ளனர்.திருடுபோன நகை, பணத்தின் மதிப்பு, 1 கோடி ரூபாய். கொள்ளையர்கள் நகை கடையிலுள்ள கண்காணிப்பு கேமரா ரெக்கார்டரையும் எடுத்துச் சென்றுள்ளனர்.தமிழகம் - ஆந்திரா மாநில எல்லையில் நகைக்கடை உள்ளதால், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என திருவலம் போலீசார் சந்தேகிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X