தந்தையை கொன்ற மகன் கைது| Dinamalar

தந்தையை கொன்ற மகன் கைது

Added : மே 25, 2022 | |
ராணிப்பேட்டை, : குடும்ப தகராறில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ஜோதி மோட்டூரைச் சேர்ந்தவர் கன்னியப்பன், 64; கூலித்தொழிலாளி. இவர் மனைவி இந்திராணி, 60. மகன் கஜேந்திரன், 40; இவரது மனைவி சரஸ்வதி, 35. இவர்களுக்கு நான்கு பெண், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.குடும்ப தகராறால், 10 ஆண்டுகளுக்கு முன் சரஸ்வதி கணவரை பிரிந்து,


ராணிப்பேட்டை, : குடும்ப தகராறில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ஜோதி மோட்டூரைச் சேர்ந்தவர் கன்னியப்பன், 64; கூலித்தொழிலாளி. இவர் மனைவி இந்திராணி, 60. மகன் கஜேந்திரன், 40; இவரது மனைவி சரஸ்வதி, 35. இவர்களுக்கு நான்கு பெண், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

குடும்ப தகராறால், 10 ஆண்டுகளுக்கு முன் சரஸ்வதி கணவரை பிரிந்து, திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ராஜா நகரத்திலுள்ள தாய் வீட்டிற்கு, குழந்தைகளோடு சென்று விட்டார்.ஏப்., 1ல் கஜேந்திரன் மூத்த மகன் சுரேஷ், 10, ராஜா நகரத்திலுள்ள குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி இறந்தார். மகன் இறப்புக்கு, சரஸ்வதியின் அஜாக்கிரதை தான் காரணம் என, ஊர் பஞ்சாயத்தில் கஜேந்திரன் முறையிட்டார்.மனைவி பிரிந்த பிறகு, அவர் மீது முறையீடு செய்ய முடியாது என, ஊர் பஞ்சாயத்தார் கூறி விட்டனர். ஆத்திரமடைந்த கஜேந்திரன் நேற்று முன்தினம் காலை, ராஜா நகரம் சென்று மனைவி சரஸ்வதியை கடத்தி, ஜோதி மோட்டூரிலுள்ள தன் வீட்டின் அறையில் பூட்டி வைத்தார்.

அதை பார்த்த அவரது தந்தை கன்னியப்பன், பூட்டை உடைத்து, சரஸ்வதியை விடுவித்து அனுப்பினார். அன்றிரவு 10:00 மணிக்கு வீட்டிற்கு வந்த கஜேந்திரன், தந்தை கன்னியப்பனிடம் தகராறு செய்தார்.ஆத்திரத்தில் அவரை கட்டையால் தாக்கியதில் அவர் இறந்து விட்டார். தடுக்க வந்த தாய் இந்திராணியையும் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். சோளிங்கர் போலீசார் கஜேந்திரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X