மதுரை மாவட்டத்தில் ஜமாபந்தி துவக்கம்

Added : மே 25, 2022 | |
Advertisement
மதுரை, :மதுரை மாவட்ட தாலுகா அலுவலகங்களில் நேற்று (மே 24) துவங்கிய ஜமாபந்தியில் ஏராளமானோர் மனுக்களை கொடுத்து தீர்வு பெற்றனர்.மேலுார் தாலுகாவில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது. இதில் 1 வது வார்டு எம்.ஜி.ஆர்., நகர் பொதுமக்கள் பட்டா மற்றும் மின் வசதி இல்லாதது மற்றும் கருத்தபுளியம்பட்டி ஆக்கிரமிப்பு, பட்டா
மதுரை மாவட்டத்தில் ஜமாபந்தி துவக்கம்

மதுரை, :மதுரை மாவட்ட தாலுகா அலுவலகங்களில் நேற்று (மே 24) துவங்கிய ஜமாபந்தியில் ஏராளமானோர் மனுக்களை கொடுத்து தீர்வு பெற்றனர்.மேலுார் தாலுகாவில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது. இதில் 1 வது வார்டு எம்.ஜி.ஆர்., நகர் பொதுமக்கள் பட்டா மற்றும் மின் வசதி இல்லாதது மற்றும் கருத்தபுளியம்பட்டி ஆக்கிரமிப்பு, பட்டா மாறுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர்.நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார். முதியோர் உதவி தொகை மற்றும் மாற்று திறனாளிகள் தலா 5 பேருக்கு உதவி தொகை வழங்கினார்.மதுரை வடக்கு தாலுகாவில் ஆர்.டி.ஓ., சுகிபிரேம்லா தலைமையில் தாசில்தார் திருமலை, துணைத்தாசில்தார் பாலகிருஷ்ணன், ராஜலட்சுமி, தாணுமூர்த்தி பங்கேற்றனர். தெற்கு தாலுகாவில் மேலுார் ஆர்.டி.ஓ., பிரிதோஸ்பாத்திமா தலைமையில் தாசில்தார் கதிர்வேலு மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டனர்.

உசிலம்பட்டி
ஆர்.டி.ஓ., சங்கரலிங்கம் தலைமையில் நடந்த ஜமாபந்தியில் நேற்று கருமாத்துார் பிர்கா கிராமங்களுக்கான கணக்குகள் சரிபார்ப்பு பணிகள், மனுக்களுக்கு விசாரணை நடத்தி தீர்வு காணும் பணி நடந்தது. தாசில்தார் விஜயலட்சுமி உட்பட வருவாய்த் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

வாடிப்பட்டி
கலெக்டர் நேர்முக உதவியாளர் (நிலம்) கிறிஸ்டி துவக்கி வைத்தார். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை தொடர்பான 211 மனுக்கள் பெறப்பட்டன. தாசில்தார் நவநீதகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தனலட்சுமி, துணை தாசில்தார்கள் நாகேந்திரன், ரவிச்சந்திரன், செந்தில்குமார், ஆர்.ஐ., சதீஷ் பங்கேற்றனர்.

திருப்பரங்குன்றம்
டி.ஆர்.ஓ., சக்திவேல் தலைமை வகித்தார். தாசில்தார் பார்த்திபன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நாகரத்தினம், தனி தாசில்தார் மேகலா, துணை தாசில்தார்கள் ராஜேஷ், மாதவன், சர்வேயர் மகேஸ்வரி பங்கேற்றனர். 170 க்கும் மேற்பட்ட பயனாளிகள் மனு செய்தனர். அவர்களில் 5 பேருக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

திருமங்கலம்
திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., அனிதா தலைமையில் நடந்த ஜமாபந்தியில் ஆ. கொக்குளம் உள் வட்டத்திற்குட்பட்ட செக்கானூரணி, கிண்ணிமங்கலம் பொதுமக்கள் மனுக்களை வழங்கினர். தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன் பங்கேற்றார். கள்ளிக்குடி தாலுகா அலுவலகத்தில் சமூக நலத் திட்ட அலுவலர் சவுந்தர்யா தலைமை வகித்தார். கள்ளிக்குடி பிர்க்கா கிராம மக்கள் மனுக்களை வழங்கினர். தாசில்தார் சுரேந்திரன் பங்கேற்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X